கோவை, ஏப்.23
உற்பத்தியை இரட்டிப்பாக்கி, மும்மடங்கு வருமானத்தை தரும் மத்திய அரசின் நுண்ணீர் பாசன திட்டத்தில் சேர, கோவை மாவட்டம், சூலுார் வட்டார தோட்டக்கலைத்துறை அழைப்பு
விடுத்துள்ளது.
இது குறித்து தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் நந்தினி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நுண்ணீர் பாசன திட்டத்தில் சேரும் சிறு, குறு விவசாயிகளுக்கு, 100
சதவீத மானியமும், இதர விவசாயிகளுக்கு, 75 சதவீத மானியமும் வழங்கப்படுகிறது. இரண்டரை ஏக்கர் வைத்துள்ள விவசாயிகளுக்கு, ரூ.1.13 லட்சமும், இரண்டு ஏக்கர் உள்ளவர்களுக்கு,
ரூ.89,682ம், ஒரு ஏக்கர் உள்ள விவசாயிகளுக்கு, ரூ.42,781ம் மானியம் வழங்கப்படுகிறது. மோட்டார் வாங்க, ரூ.15,000, தொட்டி கட்ட, ரூ.40,000, குழாய்கள் வாங்க, ரூ.10,000ம் மானியமாக
வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் சேர ஆர்வமுள்ள விவசாயிகள், சூலுார் ரயில்வே பீடர் ரோட்டில் உள்ள தோட்டக்கலைத் துறை அலுவலகத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என
அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.