January 23, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

நுண்ணீர் பாசனப் பயிற்சி

புதுக்கோட்டை, டிச.24

புதுக்கோட்டை மாவட்டத்தில், வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை மாநில விரிவாக்க திட்டங்களின் உறுதுணை சீரமைப்புத் திட்டத்தின் கீழ் 2021-22-ம் ஆண்டிற்கு நுண்ணீர் பாசனம் தொடர்பான மாவட்டத்திற்குள்ளான விவசாயிகள் பயிற்சி 23.12.2021 அன்று சொக்கநாதப்பட்டி கிராமத்தில் நடைபெற்றது. புதுக்கோட்டை வேளாண்மை உதவி இயக்குநர் செல்வி பயிற்சியினை துவக்கி வைத்தார். நுண்ணீர் பாசனம் அமைக்கும் முறை, பராமரிப்பு முறைகள் பற்றி விவசாயிகளுக்கு எடுத்துக் கூறினார்.

வேளாண்மை துணை இயக்குநர் உழவர் பயிற்சி நிலைய பெரியசாமி, உயிர் உரம் பயன்பாடு, நுண்சத்து இடுதல் மற்றும் இதர மான்ய திட்டங்கள் குறித்து விரிவாக எடுத்துக் கூறினார். நுண்ணீர் பாசனத்தின் முக்கியத்துவம் பற்றியும், நுண்ணீர் பாசனம் அவசியம் மற்றும் மானிய திட்டங்கள் பற்றியும் விரிவாக எடுத்துக் கூறினார். உழவன் செயலியின் அவசியம் மற்றும் அதன் பயன்பாடுகள் பற்றி விவசாயிகளுக்கு விரிவாக எடுத்துக் கூறினார். இப்பயிற்சியில் சொக்கநாதபட்டி கிராமத்தை சார்ந்த 40 விவசாயிகள் கலந்து கொண்டனர். இப்பயிற்சியில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை, துண்டு பிரசுரங்கள் மற்றும் சிற்றுண்டி, மதிய உணவு வழங்கப்பட்டது. முன்னதாக வட்டார தொழில்நுட்ப மேலாளர் ஆனந்தஜோதி அனைவரையும் வரவேற்று பேசினார். இதற்கான ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் பாண்டிசெல்வி, உதவி தொழில்நுட்ப மேலாளர் சத்திவேல் செய்திருந்தனர். இவ்வாறு புதுக்கோட்டை வேளாண்மை உதவி இயக்குநர் செல்வி தமது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Spread the love