October 17, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

நுண்ணீர் பாசனம் உள்மாவட்ட அளவிலான விவசாயிகள் பயிற்சி

சிவகங்கை, அக்.13

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வட்டாரம் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் விரிவாக்க சீரமைப்புத் திட்டம் அட்மா திட்டத்தின் கீழ் 2021-22ம் ஆண்டு விவசாயிகளுக்கான உள்மாவட்ட அளவிலான விவசாயிகள் பயிற்சி நுண்ணீர் பாசனம் என்ற தலைப்பில் மணலூர் வருவாய் கிராமத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது.

இப்பயிற்சியில் திருப்புவனம், வேளாண்மை உதவி இயக்குநர் க.கண்ணன், தலைமையேற்று திட்ட செயல்பாடுகள் பற்றி எடுத்துக் கூறினார். திருப்புவனம், துணை வேளாண்மை அலுவலர்திருமுனியசாமிஅவர்கள் திருப்புவனம் வட்டாரத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மானியத்தில் நுண்ணீர் பாசனம் அமைக்க தேவையான ஆவணங்கள் பற்றியும் பராமரிக்கும் முறைகள் பற்றியும் எடுத்துக் கூறினார். மேலும் தண்ணீர் வசதி இல்லாத விவசாயிகள் நுண்ணீர் பாசனத்துடன் இணைந்து துணை நிலை நீர் பாசன மேலாண்மை திட்டதிலும் பதிவு செய்து கொள்ளலாம் எனவும் கூறினார். ஆழ்துணை கிணறு, டீசல் அல்லது மின் மோட்டார், தரை மட்ட நீர் தேக்க தொட்டி ஆகியவற்றிக்கு பின்னேற்பு மானியமாக வழங்கப்படுவதாக கூறினார். (ரூட்ஸ் இரிகேசன் நிறுவனத்திலிருந்து கலந்துக் கொண்டு நுண்ணீர் பாசனம் மற்றும் பராமரிப்பு முறைகள் பற்றி எடுத்துக் கூறினார். திருப்புவனம் உதவி வேளாண்மை அலுவலர் முத்துப்பிரியா, வேளாண் துறை திட்டங்கள் மற்றும் இடுபொருட்கள் இருப்பு பற்றி விவசாயிகளுக்கு கூறினார். விவசாயிகள் தங்களுக்கு ஏற்பட்ட சந்தேகங்களை தெளிவுபடுத்தி கொண்டனர். வட்டார தொழில்நுட்ப மேலாளர் க.அன்பழகன் அட்மா திட்ட செயல்பாடுகள் பற்றி விவசாயிகளுக்கு கூறினார். இப்பயிற்சிக்கான ஏற்பாடுகளை உதவி தொழில் நுட்ப மேலாளர்கள் மு.நந்தினி மற்றும் சண்முகபிரியா ஆகியோர் செய்திருந்தனர். கிராம நிர்வாக அலுவலர், ஊராட்சி மன்ற தலைவர், கிராம முன்னோடி விவசாயிகள் மற்றும் 40 விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Spread the love