October 23, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

நுண்ணீர் பாசனம்-விவசாயிகள் பயிற்சி

சிவகங்கை, அக்.8

சிவகங்கை மாவட்டம், கல்லல் வட்டாரம் வேளாண்மை-உழவர் நலத்துறை சார்பில் அட்மா விரிவாக்க சீரமைப்பு திட்டத்தின் கீழ் உள்மாவட்ட விவசாயிகள் பயிற்சி நுண்ணீர் பாசனம் குறித்து கண்டராமாணிக்கம் கிராமத்தில் நடைபெற்றது. கல்லல் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அழகுராஜா தலைமை வகித்து நுண்ணீர் பாசன திட்டங்கள், பயிர் காப்பீடு திட்டம் மற்றும் மத்திய மாநில திட்டங்கள் பற்றி எடுத்துரைத்தார். வேளாண்மை அலுவலர் (உழவர் பயிற்சி நிலையம்) வீரையா, நுண்ணீர் பாசனத்திட்டத்தின் பயன்கள், செயல்பாடுகள் குறித்து விளக்கினார். தண்ணீர் வசதியில்லாத விவசாயிகள் நுண்ணீர் பாசனத்துடன் இணைந்து துணை நிலை நீர் பாசன மேலாண்மை திட்டத்தில் பதிவு செய்து கொள்ளலாம். மேலும், நுண்ணீர் பாசனத்திட்டத்தில் பயனடைய சிறு, குறு விவசாயிகள் மற்றும் பெரு விவசாயிகளுக்கு மானியத்தில் பயன்பெறலாம். அதற்கு தேவையான ஆவணங்கள் குறித்து டெக்னிஷியன் நெட்டவர்ம் கம்பெனி முருகன் எடுத்துரைத்தார்.

இந்நிகழ்ச்சியில் கார்த்திகா, வேளாண்மை அலுவலர், கல்லல், கனகராஜ், வேளாண்மை உதவி அலுவலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை வட்டார தொழில்நுட்ப மேலாளர் சூர்யா, உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் அருண்மொழி மற்றும் குருதாஸ் செய்திருந்தனர்.

Spread the love