October 17, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

நுண்ணீர் பாசன பயிற்சி

சிவகங்கை, அக்.13

சிவகங்கை மாவட்டம், சிவகங்கை வட்டாரம், வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறைசார்பில் விரிவாக்க சீரமைப்புத் திட்டம் அட்மா திட்டத்தின் கீழ் 2021-22ம் ஆண்டு விவசாயிகளுக்கான உள்மாவட்ட அளவிலான விவசாயிகள் பயிற்சி நுண்ணீர் பாசனம் என்ற தலைப்பில் சாலூர் கிராமத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது.

இப்பயிற்சியில் சிவகங்கை, வேளாண்மை உதவி இயக்குநர் அ.வளர்மதி, தலைமையேற்று திட்ட செயல்பாடுகள் பற்றி எடுத்துக் கூறினார். வேளாண்மை அலுவலர் தங்கப்பாண்டியன், சிவகங்கை வட்டாரத்தில் செயல்படுத்தபடும் திட்டங்கள், மானியத்தில் நுண்ணீர் பாசனம் அமைக்க தேவையான ஆவணங்கள் பற்றியும், பராமரிக்கும் முறைகள் பற்றியும் எடுத்துக் கூறினார். மேலும் தண்ணீர் வசதி இல்லாத விவசாயிகள் நுண்ணீர் பாசனத்துடன் இணைந்து துணை நிலை நீர் பாசன மேலாண்மை திட்டதிலும் பதிவு செய்து கொள்ளலாம் எனவும் கூறினார். ஆழ்துணை கிணறு, டீசல் அல்லது மின் மோட்டார், தரை மட்ட நீர் தேக்க தொட்டி ஆகியவற்றிக்கு பின்னேற்பு மானியமாக வழங்கப்படுவதாக கூறினார். பிரிமியர் இரிகேசன் சுந்தரபாண்டியன், சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு நுண்ணீர் பாசனம் மற்றும் பராமரிப்பு முறைகள் பற்றி எடுத்துக் கூறினார். சிவகங்கை வேளாண்மை உதவி அலுவலர் பிரியதர்ஷினி, நன்றியுரை கூறினார். இப்பயிற்சியில் விவசாயிகள் கலந்துக் கொண்டு தங்களுக்கு ஏற்பட்ட சந்தேகங்களை தெளிவுபடுத்தி கொண்டனர். இப்பயிற்சிக்கான ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் ராஜா மற்றும் ஆனந்தவள்ளி ஆகியோர் செய்திருந்தனர்.

Spread the love