October 17, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

நுண்ணீர் பாசன பயிற்சி

சிவகங்கை, அக்.12

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை வட்டாரம், திராணி கிராமத்தில் மாநில விரிவாக்க திட்டங்களுக்கான உறுதுணை சீரமைப்புத் திட்டத்தின் (அட்மா) கீழ் 2021-22ம் ஆண்டு விவசாயிகளுக்கான உள் மாவட்ட அளவிலான விவசாயிகள் பயிற்சி நுண்ணீர் பாசனம் என்ற தலைப்பில் 40 விவசாயிகளுக்கு நடைபெற்றது. இப்பயிற்சியில் கோ.நெப்போலியன் வேளாண்மை உதவி இயக்குனர், வரவேற்புரை ஆற்றினார். வேளாண்மை இணை இயக்குனர் கி.வெங்கடேஸ்வரன், தலைமையேற்று இப்பயிற்சியின் நோக்கத்தை அனைத்து விவசாயிகளும் கேட்டறிந்து பயனடையுமாறு கேட்டுக்கொண்டார். அதன்பின் திராணி ஊராட்சி மன்ற தலைவர் திரு.நாகராஜன் அவர்கள் கிராமத்தின் சிறப்புகள் பற்றி விளக்கி சிறப்புறையாற்றினார். சிவகங்கை வேளாண்மை துணை இயக்குனர் இரா.சுருளிமலை, நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ் சிறு, குறு விவசாயிகள் 100% சதவீத மானியத்திலும் பெரு விவசாயிகள் 75% சதவீத மானியத்திலும் நுண்ணீர் பாசனத்திற்கான உபகரணங்கள் வழங்கப்படுகிறது என்றும் அதற்கான ஆவணங்களான 10(1), அடங்கல், ஆதார்கார்டு நகல், வங்கி கணக்கு புத்தக நகல், புகைபடம்(2) தேவை என்பதையும் விளக்கி தொழில்நுட்ப உரையாற்றினார்.

வேளாண் உதவி செயற்பொறியாளர் தி.சுப்பிரமணியன், விவசாய பயிர்களின் தேவைக்கேற்ப நுண்ணீர் பாசனமானது சொட்டு நீர் பாசனம், தெளிப்பு நீர் பாசனம் மற்றும் மழைதூவான் என மூன்று முறைகளில் பயிர்களுக்கு ஏற்றவாறு பயன்படுத்தலாம் எனவும், நுண்ணீர் பாசன முறைகள் மூலம் 40% சதவீத நீர் ஆதாரம் சேகரிக்கலாம் எனவும் தொழில்நுட்ப உரையாற்றினார். சிவகங்கை, தரக்கட்டுபாடு வேளாண்மை அலவலர் கருணாநிதி, நுண்ணீர் பாசனத்தின் மூலம் திரவ உரங்கள் பயன்படுத்தும் முறைகள் பற்றி விளக்கினார். தேவகோட்டை துணை வேளாண்மை அலுவலர் ஏ.இராமலிங்கம், நுண்ணீர் பாசனம் அமைப்பதற்கு முன் நீரின் தன்மையை பரிசோதனை செய்வது பற்றிய தெழில்நுட்ப உறையாற்றினார். மேலும் பிரிமியர் இரிகேசன் கம்பெனி சார்ந்த சுந்தரபாண்டியன், நுண்ணீர் பாசனத்தில் செயல்விளக்கம் அளித்தார். தேவகோட்டை வட்டார தொழில் நுட்ப மேலாளர் செ.பிராசாந்த் மற்றும் உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் அ.தங்கபாண்டியன், கோ.தீபா, இப்பயிற்சியின் ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொண்டனர். தேவகோட்டை உதவி வேளாண்மை அலுவலர் சா.சர்பின்சா, இப்பயிற்சியில் கலந்து கொண்ட விவசாயிகள் மற்றும் அலுவலர்களுக்கு நன்றியுரை தெரிவித்தார். இப்பயிற்சியின் இறுதியில் திராணி கிராமத்தில் விவசாயிகளின் சார்பாக சிவகங்கை வேளாண்மை இணை இயக்குநர் மற்றும் வேளாண்மை துணை இயக்குநர் மரக்கன்றுகள் நடவு செய்தனர்.

Spread the love