June 29, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

நுண்ணுயிர் உரங்களை உபயோகிக்கும் போது கவனிக்கப்பட வேண்டியவை

உயிர் உரம் என்பது இயற்கை உரத்தின் ஓர் அங்கமாகும். பாக்டீரியாக்களையும், பூஞ்சானங்களையும் கொண்டு தயாரிக்கப்படும் இவ்வுரம் மண்வளத்தை மேம்படுத்தி அதன் மூலம் பயிர் விளைச்சலை அதிகரித்து, நல்ல தரமான வேளாண் பொருட்கள் கிடைக்க உதவுகிறது. பல்வேறு வகையான உயிர் உரங்கள் பயிர்களுக்கேற்றவாறு உபயோகப்படுத்தப்படுகிறது. ரைசோபியம், அசோலா, அசோஸ்பைரில்லம், அசட்டோபேக்டர் போன்ற உயிர் உரங்கள் தழைச்சத்து மேம்பாட்டிற்காகவும், பாஸ்போபாக்டீரியா மற்றும் வேர் பூசணம் மணிச்சத்து மேம்பாட்டிற்காகவும் பயன்படுகிறது. இவ்வுயிர் உரங்களை உபயோகித்து அதிக பயன்பெற

ழூ வெயில் படாத குளிர்ச்சியான, உலர்ந்த இடத்தில் சேமிக்க வேண்டும்.
ழூ நுண்ணுயிர் உரங்களை அதன் பொட்டலங்களில் பரிந்துரை செய்துள்ள கடைசி தேதிக்குள் உபயோகப்படுத்த வேண்டும்.
ழூ அங்ககப் பொருட்கள் மற்றும் தொழு உரம் அதிகம் இருக்கும் நிலத்தில் நுண்ணுயிர் உரங்களின் செயல்பாடும் அதிகம் என்பதால் அதிகமாக தொழுஉரம் இடவேண்டும்.
ழூ விதை நேர்த்தி செய்யும் போது நுண்ணுயிர் உரங்களை இறுதியாக பயன்படுத்தவும். (அரிசி கஞ்சி அல்லது வெல்லக்கரைசல் உபயோகித்தால் நுண்ணுயிர் உரங்கள் விதையுடன் நன்கு ஒட்டிக் கொள்ளும்).

ழூ நுண்ணுயிர் உரங்கனை வெயிலுக்கு முன் அதிகாலை நேரத்தில் உபயோகிக்க வேண்டும் என திண்டுக்கல் விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர் ம.ச.சந்திரமாலா தெரிவித்துள்ளார்.

Spread the love