June 29, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

நுண்ணூட்ட உரம் பயன்படுத்தும் முறை குறித்து வேளாண் கல்லூரி மாணவர்கள் செயல்முறை விளக்கம்

விருதுநகர், மார்ச் 9

சிவகாசியில் விவசாயிகளுக்கு கலசலிங்கம் பல்கலைக்கழக மாணவர்கள் கிராம தங்கல் திட்டத்தின் கீழ், புற்றுநோய் குறித்தும் அதன் பரவல் குறித்தும் மேலும் அதன் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தும் விழிப்புணர்வும் ஏற்படுத்தினர்.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டாரத்தின், புதுப்பட்டி கிராமத்தில், கலசலிங்கம் வேளாண்மை மற்றும் தோட்டக்கலை கல்லூரி மாணவர்கள், ம.அபினேஷ், கு.நாகராஜன், சு.இசக்கிராஜ், கோ.ஸ்ரீராம், அ.அதுல்கிருஷ்ணன், க.ஷியாம்(எ)சோனைமுத்து, கோ.சீ.ஸ்ரீநாத் ஆகியோர் விவசாயிகளுக்கு புற்றுநோய் குறித்தும் அதன் பரவல் குறித்தும் மேலும் அது வராமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தும் விழிப்புணர்வும் ஏற்படுத்தினர்.

இவற்றில், புற்றுநோய் ஒரு தொற்றுநோய் அல்ல. ஆண்களுக்கு நுரையீரல், வயிறு, குடல், உணவுக்குழாய், ப்ராஸ்ட்ரேட் சுரப்பிகளிலும், பெண்களுக்கு மார்பகம், நுரையீரல், வயிறு, குடல், கர்ப்பப்பை வாய் ஆகியவற்றிலும் அதிகமாக புற்றுநோய் வருகிறது. நம் உடலில் உள்ள பழைய உயிரணுக்கள் அவற்றின் கால அளவை மீறி உயிர் வாழ்ந்து விடுகின்றன. இந்த அதிகப்படியான உயிரணுக்கள் உடலில் கட்டியாகத் தோன்றுகின்றன. புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகள்
• குரலில் திடீர் மாற்றம், தொடர் இருமல், குரலில் கரகரப்பு
• முழுங்குவதில் தொடர் சிரமம், தொண்டையில் அடைப்பு போல் தோன்றுதல்
• நாக்கை அசைப்பதில் சிரமம்
• காரணமில்லாமல் எடை குறைவு
• பெண்களுக்கு மார்பகங்களில் கட்டி
• உடலில் கட்டி தோன்றுதல்.

புற்றுநோயை தடுக்கும் உணவுகள்
• புற்றுநோய்க்கு நெல்லிக்காய் மற்றும் துளசி அற்புத மருந்தாகிறது
• துளசியை பயன்படுத்தி புற்றுநோய் வராமல் தடுக்கும் தேனீர் தயாரிக்கலாம்
• அருகம்புல் ஒரு நல்ல மருந்தாகிறது.
• கேரட்டை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் புற்றுநோய் வராமல் தடுக்கலாம்.

• பப்பாளி ஒரு அற்புதமான உணவாகிறது. சர்க்கரை நோய், கேன்சருக்கு மருந்தாகிறது.

Spread the love