June 29, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

நெற்பயிரியில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை குறித்த தொழில்நுட்பங்கள்

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி வட்டாரம், அட்மா திட்டத்தின் கீழ் நெற்பயிரியில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை குறித்த தொழில்நுட்பங்களை வேளாண்மை உதவி இயக்குநர் அ.அம்சவேணி விரிவாக எடுத்து கூறினார். ஆண்டு தோறும் சுமார் பல கோடி ரூபாய் அளவிற்கு பூச்சிகள், நோய்கிருமிகள் மற்றும் களைகளால் மகசூல் இழப்பு ஏற்படுகிறது. இவற்றை கட்டுபடுத்த இரசாயண பூச்சி கொல்லிகள் அதிக அளவில் பயன்படுத்துகின்றன். எனவே பொருளாதாரத்திற்கு ஏற்றதாகவும், சுற்றுச் சுழலுக்கும் உகந்ததாகவும் நிலையானதாகவும் உள்ள பூச்சிக் கட்டுபாடு முறையை கடைபிடித்து அத்தியாவசிமாகிறது. அனைத்து வகையான கட்டுபாட்டு முறைகளையும் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த பூச்சிக் கட்டுப்பாடே இதற்கான சிறந்த மாற்றுத் தீர்வாகும்.

  1. உழவியல் முறை :
    பயிர் சுழற்சி, ஊடு பயிர், கவர்ச்சி பயிர், நீர் மேலாண்மை சரியான விதைப்பு மற்றும் அறுவடை பருவம் ஆகியவற்றை கடைபிடிப்பதன் மூலம் பூச்சி நோய்களால் ஏற்படும் தாக்கத்தை குறைக்கலாம். எடுத்துகாட்டாக நெல் மற்றும் பருத்தி வயல்களில் வரப்பு பயிராக தட்டைபயிரை பயிரிடுவதன் மூலம் பொறி வண்டுகளில் பெருக்கம் அதிகரித்து நெல் மற்றும் பருத்தி சாறு உறுஞ்சும் பூச்சிகளின் தாக்குதல் குறைகிறது. கோடை உழவு செய்வதன் மூலம் மண்ணில் உள்ள கூட்டுபுழுக்கள், வேர் புழுக்கள் வெளிகொணர்ந்து பறவைகளுக்கு இரையாக்களாம். விளக்குப் பொறிகளை 1-2 மீட்டர் உயரத்தில் அமைத்து தாய் அந்துப்பூச்சிகளை கவர்ந்தழிக்கலாம்.
  2. இயற்பியல் மற்றும் பொறியியல் முறைகள் :
    பல்வேறு இயற்கை சக்திகளான வெப்பம், குளர்ச்சி, ஒளி மற்றும் ஒலி ஆகியவற்றை கொண்டு பூச்சிகளை கட்டுபடுத்தலாம். உதாரணமாக நெல் தானியங்களை வெயிலில் உலர்த்தி ஈரப்பதத்தை 8-10 சதவீதத்தைக் கொண்டு வருவதன் மூலம் சேமிப்பில் வரும் பூச்சி மற்றும் பூஞ்சாணங்களை தவிர்க்கலாம். தஞ்சாவூர் எலிக்கிட்டிகள் மூலம் நெல் வயலில் எலிகளின் தாக்கத்தைக் குறைக்கலாம்.
  3. ஏதிர்ப்பு திறன் உள்ள பயிர் ரகங்கள்
    ஒருங்கிணைந்த பூச்சி கட்டுபாடு முறையில் நோய் மற்றும் பூச்சி எதிர்ப்பு திறன் உள்ள ரகங்கள் முக்கிய பங்காற்றுகின்றன. அதன் மூலம் செடி வளரும் பொழுது பூச்சி மற்றும் நோய் மேலாண்மைக்கான செலவை வெகுவாக குறைக்கலாம்.
  4. உயிரியல் முறைகள் :
    தீங்கு செய்யும் பூச்சிகளை உண்டு அழிக்கக்கூடிய இயற்கை எதிரிகளின் மூலம் நாம் பூச்சிகளை கட்டுபடுத்த முடியும். டிரைக்கோகிராமா முட்டை ஒட்டுண்ணியானது நெல், கரும்பு, சோளம் மற்றும் காய்கறிப்பயிர்களை தாக்கும் தண்டுத்துளைப்பான், இலைசுருட்டுப் புழு மற்றும் காய் துளைப்பான்களை வெற்றிகரமாக தாக்கி அழிக்கின்றன.
  5. இனக்கவர்ச்சி பொறி :
    இனக்கவர்ச்சி பொறி மூலம் ஆண் அல்லது பெண் பூச்சிகள் கவரப்படுவதால் வயலில் முட்டையிடுவது குறைந்து தாக்குதல் குறைகிறது. இந்தியாவில் பச்சை காய்ப்புழு, புரடீனியா வெட்டுப் புழு நெல் தண்டு துளைப்பான் போன்ற பூச்சிகளுக்கு இவை கிடைக்கிறது. புனல் வடிவ மற்றும் பக்கெட் வடிவ பொறிகளில் வைக்கப்படும் செப்டா எனப்படும் கவர்ச்சி பொருளை 15 நாட்களுக்கு ஒருமுறை மாற்ற வேண்டும்.
  6. தாவர பூச்சிகொல்லிகள் :

இரசாயன பூச்சிக்கொல்லிகளை தொடர்ந்து பயன்படுத்துவதால் ஏற்படும் பூச்சிகொல்லி எதிர்ப்பு தன்மையை குறைக்க தாவர பூச்சி கொல்லிகள் பயன்படுகின்றன. இவை பூச்சிகள் உண்ணும் திறனையும், முட்டையிடும் திறனையும் குறைக்கின்றன. வேம்பு, நொச்சி, வசம்பு புங்கம் போன்றவற்றின் எண்ணெய் மற்றும் பொடிகள் பல்வேறு பூச்சிகளை கட்டுபடுத்துகின்றன. வேம்பிலிருக்கும் அசாடிராக்டின் என்ற பொருளே பூச்சி கட்டுபாட்டுக்கு முக்கிய காரணம்.

Spread the love