May 18, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

நெற்பயிருக்கு ஏற்ற பசுந்தாள் உரங்கள் மற்றும் அவற்றின் சிறப்பியல்புகள்

சணப்பை : சணப்பை மிக வேகமாக வளரக்கூடியது. இப்பயிர் தழை உரத்திற்காகவும், இதிலிருந்து கிடைக்கக் கூடிய நாருக்காகவும் வயர்க்கப்படுகிறது. இதை 45 நாட்களில் மடக்கி உழுது தழை உரமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். தண்ணீர் தேங்கி இருந்தால் இதன் வளர்ச்சி பாதிக்கப்படும். 25 முதல் 35 கிலோ விதையினை ஒரு ஏக்கருக்கு பயன்படுத்தலாம்.
தக்கைப்பூண்டு : களிமண் பாங்கான பூமிக்கு இது மிகச் சிறந்த பசுந்தாள் பயிராகும். முக்கியமாக களர் நிலங்களைச் சீராக்குவதில் இதன் பங்கு இன்றியமையாதது, இது வேகமாக வளரக்கூடியது. துண்ணீர் தேக்கத்தையும், வறட்சியையும் ஒரளவிற்கு தாங்கி வளரும். இரண்டிலிருந்து நான்கு மாதங்களில் ஒரு எக்டரில் 10-20 டன் தழையைக் கொடுக்க வல்லது. ஒரு எக்டருக்கு 20-25 கிலோ விதையினை உயபோகிக்கலாம். 40 முதல் 50 நாட்களில் மடக்கி உழுது எருவாக பயன்படுத்தலாம்.
மணிலா அகத்தி : மணிலா அகத்தி வேர்ப்பாகத்திலும், தண்டு பாகத்திலும் வேர் முடிச்சுக்களை கொண்டுள்ளது. நீர் தேக்கமுள்ள நன்செய் நிலங்களில் நன்றாக வளர்ந்து, காற்றிலிருந்து அதிக தழைச்சத்தை கிரகித்து தனது தண்டு மற்றும் வேர் முடிச்சுகளில் தேக்கி மக்கிய பிறகு விரைவாக நெல்லுக்கு தரும் தன்மையுடையது. ஒரு ஏக்கருக்கு 30 முதல் 40 கிலோ விதை தேவைப்படும் 45 முதல் 60 நாட்களில் மடக்கி உழுதிடலாம்.

எனவே நெல் பயிரிடும் விவசாயிகள் மேலே குறிப்பிட்டுள்ள பசுந்தாள் உரங்களை பயிரிட்டு பயனடையுமாறு நாகப்பட்டினம், விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர், ஆர்.சுதா தெரிவித்துள்ளார்.

Spread the love