August 13, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

நெற்பயிரைத் தாக்கும் இலையுறை அழுகல் மற்றும் இலையுறை கருகல் நோய்களும் அதனை கட்டுப்படுத்தும் முறைகளும்

விருதுநகர், வத்திராயிருப்பு வட்டாரத்திற்குட்பட்ட வருவாய் கிராமங்களான எஸ்.கொடிக்குளம் மற்றும் மகாராஜபுரம் கிராங்களில் பயிர் செய்யப்பட்டு வரும் பெருவாரியான நெல் இரகங்களின் இலையுறை அழு
கல் மற்றும் இலையுறை கருகல நோய்களின் தாக்கம் 30 – 40% வரை இருக்கிறது. இதனால் நெல் மணிகள் உருவாக்கும் திறன் குறைந்து பதராக மாறி விடுகிறது. தற்போது நிலவி வரும் அதிக மழை, குறைந்த வெப்பநிலை மற்றும் அந்த பனிப் பொழிவு போன்ற சூழ்நிலைக் காரணிகளால் இவ்வகை பூஞ்சாண நோய்கள் தீவிரமடைந்துள்ளது.

இலையுறை அழுகல் நோய் அறிகுறிகள்

நெற்கதிர் பொதி இலைகளிலிருந்து வெளி வரும் தருணத்தில் இந்நோயின் தாக்கம் அதிகளவில் உள்ளது. பழுப்பு நிறத் திட்டுகள் பொதி இலைகளின் மேற்பகுதியில் தோன்றுவதால் நெற்கதிர் வெளிவருவது தடைப்பட்டு நெல் மணிகள் பதராக மாறி விடும்.

நோய் மேலாண்மை

நோய்த்தாக்கம் குறைவாக இருக்கும் போது வேப்பங்கொட்டைச் சாறு (5%) தெளிக்கலாம். நோய் தீவரமடையும் பட்சத்தில் ஹெக்ஸகனகோல் 200 கிராம் / ஏக்கம் என்ற ஊடுருவிப்பாயும் மருந்தினை 15 நாட்கள் இடைவெளியில் இரு முறை தெளிக்கவும்.

இலையுறை கருகல்

வடிகால் வசதி இல்லாத தண்ணீர் அதிகமாக தேங்கி நிற்கும் வயல்வெளிகளில் இந்நோயின் தாக்கம் அதிகமாகக் காணப்படுகிறது. தண்டுப்பகுதியைச் சற்றிலும் பழுப்பு நிறத்திட்டுகள் தோன்றி அதன் தாக்கம் தண்டுக்குள் உட்புகுந்து அதன் திசுக்களைத் தாக்கி நெல்பயிரின் தூர்கள் முழுவதையும் அழுகச் செய்து விடும்.

மேலாண்மை

  1. நீர் மறைய நீர் கட்ட வேண்டும்.
  2. கார்பன்டாசிம் (200 கிராம் / ஏக்கர்) என்றளவில் தூர்பாகம் நனையும்படி தெளிக்கவும்.

3. நடவு வயலில் வேப்பம்பிண்ணாக்கு 250 கிராம் / ஏக்கர் என்றளவில் வயல்களில் தூவி பின் உழவு போட வேண்டும்.

Spread the love