May 10, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

நெல்சாகுபடியில் எலிகளை கட்டுப்படுத்திட வேளாண்மை இணை இயக்குநர் ஆலோசனை

புதுக்கோட்டை, மே 3

நெற்பயிர் சாகுபடியில் எலிகளால் ஏறக்குறைய 25 சதவீதம் மகசூல் குறைவதற்கு வாய்ப்பபுள்ளதால் விவசாயிகள் ஒருங்கிணைந்த முறையில் கட்டுப்படுத்திடவேண்டும் என புதுக்கோட்டை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் இராம.சிவகுமார் ஆலோசனை வழங்கினார்.

பயிர் சாகுபடியினை பொறுத்தவரை நெற்பயிர்களை எலிகள் அதிகளவு பாதிக்கின்றது. மேலும் உணவு தானியங்களைச் சேமித்து வைக்கும் போது எலிகளால் 30மூ இழப்பு ஏற்படுகிறது. வயல் எலி, புல் எலி, வயல் சுண்டெலி ஆகிய எலிகள் தான் பயிர்களை அதிகம் தாக்கிச் சேதம் விளைவிக்கிறது. எலிகள் குறுகிய காலத்தில் அதிகளவு இனப்பெருக்கம் செய்வதனால் சேதம் அதிகம் ஏற்படுகிறது. மேலும் எலிகளின் பற்கள் வேகமாகவளரும் தன்மையுடையதால் எலிகள் பயிர்கள் வளரும் பருவத்தில் கடித்து சேதப்படுத்துகின்றன. எனவே விவசாயிகள் எலிகளை ஒருங்கிணைந்த முறைகளில் கட்டுப்படுத்த வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறது.

ஒருங்கிணைந்த எலி ஒழிப்பு முறைகள்:
Ø பயிர் சாகுபடியின் தொடக்கத்தில் எலிகளின் இனப்பெருக்ககாலமான ஜனவரி – மார்ச், செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் வரப்பு, வளைகளை வெட்டி எலிகளைக் குட்டிகளுடன் பிடித்து அழிக்கலாம். குறுகிய வரப்புகளை அமைத்தும் எலிகளைக் கட்டுப்படுத்தலாம்.
Ø வயலுக்கு அருகில் வைக்கோல் போற் வைத்திருந்தால் எலிகளுக்கு உறைவிடமாக அமையும். எனவே வைக்கோல் போற் வைப்பதை தவிர்க்கவேண்டும்.
Ø வயல்களில் களைக் கட்டுப்பாட்டுப் பணிகளை மேற்கொண்டு தூய்மையாகப் பராமரித்தால் எலிகள் நடமாட்டம் குறையும்.
Ø வயல்களில் ஆக்காங்கே ‘வு” வடிவக் குச்சிகள் அல்லது தென்னை மட்டையின் அடிப்பகுதியைத் தலைகீழாக வைத்து ஆந்தை, கோட்டான் மற்றும் பறவைகளை அமரச் செய்து எலிகளைப் பிடித்து உண்ண வகை செய்யலாம்.
Ø வயல்களில் மூங்கில் கிட்டிகளை (ஏக்கருக்கு 25 முதல் 40 கிட்டிகள்) வரப்பு ஓரங்களிலும், வயலினுள்ளும் வைக்கவும். வைக்கோலை மெத்தை போன்று சிறிது அகலமாகவும் தட்டையாகவும் செய்து எலிக்கிட்டியை ஊன்றி வில்லுக்கு இரு புறமும் வைக்கோல் மீது நெல் பொரியை இட்டு மாலை நேரங்களில் வைத்து எலிகளை பிடித்து அழிக்கலாம்.

சிங்க் பாஸ்பைடு எலி நஞ்சு:
Ø சிங்க் பாஸ்பைடு எலி நஞ்சுவை வைக்கும் முன் முதல் மூன்று நாட்கள் 98 கிராம் நெற்பொரி + 2 கிராம் தேங்காய் எண்ணெய் இட்டு வைத்து பழக்கப்படுத்திட வேண்டும்.
Ø பின்பு 96 கிராம் நெற்பொறி – 2 கிராம் தேங்காய் எண்ணெய் + 2 கிராம் சிங்க் பாஸ்பைடு கலந்து 4 முதல் 5 – ஆவது நாள் தேங்காய் கொட்டாங்குச்சியில் கைப்படாமல் இட்டு வைத்து அழிக்கலாம்.

புரோமோடைலான்:
ஒரு முறை சாப்பிட்டாலேஎ லிகளைக் கொல்லும் இரத்தம் உறையாத் தன்மை கொண்ட நஞ்சினைக் கொண்ட புரோமோடையலான் – 0.005மூ மற்றும் கம்பு அல்லது கோதுமை மாவு கலந்த கேக் கிடைக்கிறது. இதனை வளைக்கு ஒரு வில்லை வீதம் வைத்தும் வயல்களில் எலிகளின் நடமாட்டம் உள்ள பகுதிகளில் வைத்தும் எலிகளை அழிக்கலாம். ஒரு தடவை 5 கிராம் உணவு உண்டாலே உடலில் இரத்தக் கசிவு ஏற்பட்டு எலிகள் இறந்து விடும்.

அலுமினியம் பாஸ்பைடு மாத்திரைகள்:
ஒரு அலுமினியம் பாஸ்பைடு (சுமார் 3 கிராம்) மாத்திரையை வளையின் நடுவில் ஒரு துண்டுக் காகிதத்தைத் தரையில் வைத்து அதன் மேல் மாத்திரையை வைத்து வளையின் வாயிலை நன்கு மூடி விடவும். வளையின் உள்ளே நச்சுப்புகை பரவி எலிகளைக் கொன்று விடும். எலிகள் விரைவில் இறப்பதற்கு வளையில் போதிய அளவு மண் ஈரம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

எனவே விவசாயிகள் பயிர்களை சேதப்படுத்தும் எலிகளை ஒருங்கிணைந்த முறையில் கட்டுப்படுத்திடவும் மேலும் கூடுதல் விவரங்களுக்கு அருகில் உள்ள வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளுமாறும் புதுக்கோட்டை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் இராம.சிவகுமார் கேட்டுக் கொண்டுள்ளார்.

Spread the love