தஞ்சாவூர், மார்ச் 9
பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் வேளாண்மை கல்லூரியைச் சேர்ந்த இறுதியாண்டு மாணவர்கள் சீ.சங்கர், பெ.வினித் பிரசன்னா, மா.அப்துல் கலாம், கு.அபிஷேக், அ.அரவிந்த், ப.பாலாஜி, ரா.பாலமுருகன் தங்களின் ஊரக பணி அனுபவத்தின் போது தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டம், பசுபதி கோவில் கிராமாத்தில் உள்ள மகளிர் சுயஉதவிக் குழுவைச் சந்தித்து நெல்லிக்காயில் மதிப்பு கூட்டுதல் குறித்து மாணவர்கள் செயல்விளக்கம் அளித்தனர். நெல்லிக்காய் மூலம் தேன்நெல்லி, நெல்லிக்காய் காரம், நெல்லிக்காய் உலர்ந்த பொடி விளக்கம் அளித்தனர். தேன் நெல்லிக்காய் செய்ய, வேகவைத்த நெல்லிக்காயை துண்டாக்கி விதைநீக்கிய பிறகு, பெரிய பாத்திரத்தில் நாட்டு சர்க்கரை மற்றும் நறுக்கிய துண்டுகளை சேர்க்கவும், நன்கு கலந்த பிறகு மூடி வைக்கவும். மூன்று நாட்களில் தேன் நெல்லிக்காய் தயார், இவ்வாறு மதிப்பு கூட்டி விற்பனை செய்வதன் மூலம் நல்ல, நிலையான வருமானம் கிடைக்கும், மேலும் உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்துதல் ஆணையம் அங்கீகார சான்று பெறும் வழிமுறைகளையும் எடுத்துரைத்தனர்.
Spread the love