January 23, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

நெல் அறுவடைக்குப்பின் பயறு சாகுபடி செய்யலாம்

வேளாண்மை துணை இயக்குநர் அறிவுறுத்தல்
சிவகங்கை, ஜன.10

சிவகங்கை மாவட்டம், சாக்கோட்டை வட்டாரத்தில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் கீழ் இயங்கிவரும் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் மூலம் 2021-22ம் ஆண்டிற்கு இலக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியில் கிராமிய கலைநிகழ்ச்சி சித்திவயல் கிராமத்தில் நடத்தப்பட்டது.

சிவகங்கை மாவட்ட வேளாண்மை துணை இயக்குநர் பழ.கதிரேசன், கிராமிய கலை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு துவங்கி வைத்தார். அவர் தனது தலைமை உரையில் விவசாயிகள் நெல் அறுவடைக்குப்பின் பயறு சாகுபடி செய்ய அறிவுறுத்தினார். நடப்பாண்டில் அதிக மழை பெய்துள்ளது. தற்போது சம்பா பருவத்தில் பயிரிடப்பட்ட நெல் அறுவடைக்கு தயாராக உள்ளது. தற்போது, கண்மாய் மற்றும் குளங்களில் மீண்டும் பயிர் சாகுபடிக்கு தேவையான தண்ணீர் இருப்பில் உள்ளது. இதனை பயன்படுத்தி விவசாயிகள் பயறு வகை பயிர்களான உளுந்து, பாசி பயறு அல்லது தட்டைப் பயறு போன்ற பயறு வகை பயிர்களை சாகுபடி செய்ய வேண்டும். செலவு குறைந்த பயறு வகை பயிர்களையும் சிறு தானியங்களையும் விவசாயிகள் பயிரிடு வதால் விவசாயிகளின் வருமானம் அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் மண்ணும் வளம் பெறுகிறது என்று கூறினார்.

சாக்கோட்டை வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் ந.சண்முக ஜெயந்தி, கிராமிய கலை நிகழ்ச்சியை காண வருகை புரிந்த அனைவரையும் வரவேற்றார்.

மேலும் அடுத்த பருவத்திற்கு தேவையான இடுபொருட்களான பயறு விதைகள் சிறுதானிய விதைகள் உயிர் உரங்களான அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டிரியா, ரைசோபியம் நுண்ணுட்ட உரங்களான பயறு நுண்ணூட்டம், சிறுதானிய நுண்ணூட்டம், நிலக்கடலை நுண்ணூட்டம் ஆகியவைகள் சாக்கோட்டை வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் இருப்பில் உள்ளதாகவும் அவற்றை விவசாயிகள் மானிய விலையில் பெற்று பயனடையலாம் என கூறினார்.

கங்கைகருங்குயில் என்ற கிராமிய கலை நிகழ்ச்சி நடத்தும் குழுவின் மூலம் வேளாண்மை துறையில் செயல்படுத்தி கொண்டிருக்கும் மத்திய மற்றும் மாநில தி ட்டங்கள் மானிய விபரங்கள் நுண்ணீர் பாசனத் திட்டத்தின் நன்மைகள் மற்றும் தரிசு நிலங்களை விளைநிலங்களாக மாற்றி சாகுபடி பரப்பை அதிகப்படுத்த தமிழக அரசு கொண்டு வந்துள்ள புதிய திட்டங்களான அண்ணா மறுமலர்ச்சி திட்டம், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம், முதலமைச்சரின் மானாவாரி மேம்பாட்டு இயக்கம், தேசிய வேளாண் வளர்ச்சி திட்டம், தேசிய உணவு பாதுகாப்பு இயக்கம் மற்றும் விரிவாக்க சீரமைப்புத் திட்டம் போன்ற திட்டங்களையும் மற்றும் விவசாயிகளுக்கு பயனுள்ள தகவல்களையும் கிராமிய பாடல்கள், நடனங்கள், கரகாட்டம் போன்றவைகள் மூலம் சிறப்பாக எடுத்துரைத்தார்கள்.

வட்டார தொழில்நுட்ப மேலாளார் தமிழ்ச்செல்வி எஸ்தர் மற்றும் உதவி தொழில்நுட்ப மேலாளாகள் விஜய் ஆனந்த் மற்றும் கனிமொழி ஆகியோர் மூலம் இக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர். சித்திவயல் மற்றும் பிரம்புவயல் கிராமங்களைச் சேர்ந்த 100 விவசாயிகள் கலந்து கொண்டனர்.

இறுதியாக வட்டார தொழில்நுட்ப மேலாளார் தமிழ்ச்செல்வி எஸ்தர் நன்றியுரை வழங்கினார்.

Spread the love