January 23, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

நெல் தரிசில் உளுந்து சாகுபடி தொழில்நுட்பங்கள்

காவேரி டெல்டா மாவட்டங்களில், சம்பா மற்றும் தாளடி நெல் அறுவடைக்குப்பின் உளுந்து பயிரிடப்படுகிறது. நெல் பயிர் அறுவடைக்கு 7 முதல் 10 நாட்களுக்கு முன் நிலத்தில் உள்ள ஈரப்பதத்தை பயன்படுத்தி உளுந்து விதைக்கும் பழக்கம் உள்ளது.

நெல் தரிசிற்கு ஏற்ற உளுந்து இரகங்கள்
இரகம் வயது
ஆடுதுறை 3 70-75 நாட்கள்
ஆடுதுறை 5 70-75 நாட்கள்
ஆடுதுறை 6 65-70 நாட்கள்
வம்பன் 6 65-70 நாட்கள்
வம்பன் 8 65-75 நாட்கள்
வம்பன் 9 70-75 நாட்கள்

விதை அளவுஏக்கருக்கு 8 கிலோ விதைத் தேவை, ஒரு கிலோ விதையுடன் 4 கிராம் டிரைக்கோடெர்மா விரிடி அல்லது 10 கிராம் சூடோமேனாஸ் புளோரசன்ஸ் என்ற அளவில் கலந்து விதை நேர்த்தி செய்திட வேண்டும். அதன் பின் 3 பாக்கெட் அசோஸ்பைரில்லம், 3 பாக்கெட் பாஸ்போபாக்டீரியாவை 500 மிலி ஆறிய அரிசி கஞ்சியுடன் விதைகளை நன்கு கலந்து 15 நிமிடங்கள் உலர்த்தி பிறகு விதைக்க வேண்டும். பூஞ்சான விதை நேர்த்தி செய்வ தால், வேர் வாடல், இலைப்புள்ளி நோய், ஆகியவை விதை மூலம் பரவுவதை தடுக்கலாம். ரைசோபியம் விதை நேர்த்தி செய்வதால், அதிக அளவு வேர் முடுச்சுக்கள் உருவாகி காற்றில் உள்ள தழைச்சத்தினை கிரகித்து பயிருக்கு அளிக்க உதவிடும். பாஸ்போபாக்டீரியாவை விதை நேர்த்தி செய்வதால் மண்ணில் உள்ள கரையாத மணிச்சத்தினை பயிருக்கு எளிதில் கிடைத்திட வழி செய்கிறது. டிஏபி கரைசல் தெளித்தல்

உளுந்து சாகுபடியில் அதிக மகசூல் பெறுவதற்கு பூக்கும் சமயத்திலும், மணிகள் பிடிக்கும் சமயத்திலும் 2 முறை, 2 சதவீதம் டிஏபி கரைசல், அதாவது 4 கிலோ டிஏபியை 10 லிட்டர் நீரில் ஊறவைத்து, மறுநாள் தெளிந்த கரைசலை வடிகட்டி 200 லிட்டர் தண்ணீர் கலந்து மாலை வேளையில் கைத்தெளிப்பான் மூலம் தெளித்திட வேண்டும். அறுவடை முதிர்ந்த செடிகள் பழுப்பு நிறமாக மாறியவுடன் பயிர்களை வேருடன் பிடுங்கி பின்னர் பரவலாக உலர்த்தி, பின் அறுவடை இயந்திரம் மூலம் மணிகளை பிரித்து எடுக்க வேண்டும். இத்தகவலை நாகப்பட்டினம், விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்று உதவி இயக்குநர், இர.சுதா தெரிவித்துள்ளார்.

Spread the love