January 23, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

நெல் பயிரில் ஒருகிணைந்த பூச்சி மற்றும் நோய் மேலாண்மை பயிற்சி

ஈரோடு, டிச.23

ஈரோடு மாவட்டம், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, கொடுமுடி வட்டாரத்தில் சிவகிரி கிராமத்தில் 22.12.2021 அன்று வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை மூலம் 40 விவசாயிகளுக்கு நெல் பயிரில் ஒருகிணைந்த பூச்சி மற்றும் நோய் மேலாண்மை பயிற்சி அளிக்கப்பட்டது. இப்பயிற்சியினை வேளாண்மை உதவி இயக்குநர் பொ.யசோதா தலைமையில் நடைபெற்றது. குமரகுரு வேளாண்மை கல்லூரி சார்பாக நோயியல் துறை வல்லுனர் டாக்டர் பிரியங்கர், கலந்துக்கொண்டு நெல் பயிரில் ஒருகிணைந்த பூச்சி மற்றும் நோய் மேலாண்மை பற்றி படவிளக்கங்களுடன் பயிற்சி அளித்தார். மேலும் விவசாயிகளின் சந்தேகங்களையும் தெளிவுபடுத்தினார். கனகரி உழவர் உற்பத்தியாளா குழுவின்; சார்பாக பூச்சியல் துறை வல்லுனர் தாரகை கலந்துக் கொண்டு பூச்சி மேலாண்மை பற்றி பயிற்சி அளித்தார்.

விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்றுத் துறையின் சார்பாக வேளாண்மை உதவி இயக்குநர் சு.மோனசுந்தரம், கலந்துக் கொண்டு அங்கக வேளாண்மை, அங்கக சான்று பெறும் முறைகள் பற்றிய விளக்கங்களை தெளிவுப்படுத்தினார். இந்த பயிற்சியில் ஊரக வளர்ச்சி முகமையின் சார்பாக உதவி பொறியியல் அலுவலர் சக்திவேல், கலந்துக் கொண்டு துறையின் மானிய திட்டங்களைப் பற்றி விளக்கினர். தொழில் நுட்ப மேலாளர் கே.எஸ்.கிருத்திகா, உதவி தொழில்நுட்ப மேலாளர் எஸ்.சதீஸ்குமார், கலந்துக்கொண்டு பயிற்சிக்கு வேண்டிய ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர். மேலும் பயிற்சியில் ஸ்க்பர் நுண்ணீர் பாசன கம்பெனி மூலம் கண்காட்சி அமைத்து விவசாயிகளுக்கு விழிப்புணவு ஏற்படுத்தினர். காளிமுத்து, நுண்ணீர் பாசன பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு முறைகள் பற்றி செயல்விளக்கமாக செய்து காட்டினார். விவசாயிகளுக்கு நுண்ணீர் பாசனம் பற்றிய அச்சு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.

Spread the love