Ø வேப்பம் புண்ணாக்கு நெல் வயலுக்கு இடுவதால் பழுப்பு இலைப்புள்ளி நோய் குறைகிறது. குலைநோய், இலையுறைகருகல் ஏற்படுவதை தாமதப்படுத்துகிறது.
Ø நெல் நாற்றங்காலில் வேப்பம் புண்ணாக்கை எக்டருக்கு 375 கிலோ கிராம் வீதம் கடைசி உழவின் போது மண்ணில் கலந்து நாற்றங்காலை தயாரித்தால் வளரும் நாற்றுகளில் நோய் மற்றும் பூச்சியினால் ஏற்படும் பாதிப்பு குறைவாக உள்ளது.
Ø வேப்பெண்ணெய் (3 சதவீதம்) மற்றும் வேப்பங்கொட்டைச்சாறு (5 சதவீதம்) ஆகியவற்றைத் தெளிப்பதால் நெல்லின் கதிர் உறை அழுகல் நோய், செம்புள்ளி நோய், நிலக்கடலை துருநோய் முதலியவை கட்டுப்படுத்தப்படுகின்றன.
Ø வேப்பெண்ணெய் 3 சதவீதம் மற்றும் வேப்பங்கொட்டைச்சாறு 5 சதக் கரைசலை நெற்பயிரின் மீது தெளிப்பதால் நெல் துங்ரோ நோயைப் பரப்பும் பச்சை தத்துப்பூச்சியின் எண்ணிக்கை குறைகின்றது.
Ø வேப்பெண்ணெய் ஒரு சதவீதம் அடர்வில் நெற்பயிரில் தெளிப்பதால் மைக்கோபிளாஸ்மா என்ற உயிரியால் உண்டாகும் மஞ்சள் குட்டைநோயின் அளவுகுறைகின்றது.
Ø பச்சைப் பயிரியில் வேப்ப எண்ணெயை 3 சதவீதம் தெளித்து மஞ்சள் தேமல் நோய் பரவுவதைக் குறைக்கலாம்.
Ø வேப்பெண்ணெய் (3 சதவீதம்), வேப்பங்கொட்டைப் பருப்புச்சாறு (5 சதவீதம்) தெளிப்பதால் நெல்லில் இலை உறை அழுகல், இலை உறை கருகல், பாக்டீரியா இலைக்கருகல், துங்ரோ நோய்களின் தாக்குதல் குறைகிறது.
நெல் பயிரில் நோய் கட்டுப்பாட்டில் வேம்பு
Spread the love