June 29, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

நெல் பயிரில் பிற ரக கலப்பு தவிர்ப்பீர்

திருநெல்வேலி, ஜூன் 7

திருநெல்வேலி மாவட்டத்தில் அம்பை-16, ஆடுதுறை-36, ஆடுதுறை-43, ஆடுதுறை-45, திருச்சி-2 ஆகிய குறுகிய கால நெல் பயிர்களையே (வயது-120 நாட்கள்) விவசாயிகள் அதிக அளவில் பயன்படுத்துகிறார்கள்.

நெல் இரகம் எதுவாயினும் பயிர் சாகுபடிக்கு முக்கிய இடுபொருள் விதை. அந்த விதையானது தரமானதாக இருக்க வேண்டும். பயிர் அறுவடை முடிந்து கதிரடித்து பிரிக்கப்பட்டு எடுக்கப்படும் விதைக்குவியல்களிலிருந்து கிடைக்கும் விதைகள் உடனடியாக விதைப்பதற்கோ, நடவு செய்வதற்கோ தகுதியானதாக இருக்காது. எனவே இந்த விதைகளை விதைச் சுத்திகரிப்பு செய்து பிறரகக் கலப்பு இன்றி பார்த்துக் கொள்ளவேண்டும்.

விதைச் சுத்திகரிப்பின் போது சுத்திக்கு எடுக்கும் வயல்தர நெல் விதைகள் இரகம் வாரியாக சுத்திப்பணிக்கு எடுக்க வேண்டும். உங்களிடம் இருக்கும் பல்வேறு இரகங்களில் ஒரு இரகத்தின் மொத்த விதைகளையும் சுத்தி செய்த பின்பு அடுத்த இரகத்தினை சுத்திப்பணிக்கு தயார்படுத்துவதால் பிற இரகங்கள் இயல்பாக கலவா வண்ணம் உறுதி செய்ய முடியும். ஒரு இரகத்தில் இருந்து அடுத்த இரகத்திற்கு மாறும்போது நிலையத்தின் மெஷின், மெஷினர், சல்லடைகள் முதலானவற்றை நன்கு சுத்தம் செய்து பணி மேற்கொள்ள வேண்டும். பிறரக கலப்பு இல்லாமல் இருக்க மேற்கண்ட பணிகளில் கவனமுடன் செயல்படுமாறு திருநெல்வேலி விதைப்பரிசோதனை அலுவலர் ஞா.ஆனந்தி ராதிகா கேட்டுக் கொண்டார்.


Spread the love