குலை நோய்
நோய் விவரம்:
இது ஒரு பூஞ்சாண நோய் ஆகும். ஆரம்ப காலத்தில் புல், பூண்டுகளையும் பின் நெல் பயிரையும் தாக்குகிறது.
· காற்று மூலம் பரவும்.
· அதிகமான பனி, குறைந்த வெப்பநிலை, காற்றில் அதிக ஈரப்பதம் உள்ள காலங்களில் வேகமாக பரவும்.
நோயின் அறிகுறிகள் :
நெல் பயிரின் இலை, கணு, கதிரின் கழுத்து ஆகியவற்றை தாக்கும். ஆரம்பத்தில் இலைகளில் நீண்ட கண் வடிவ புள்ளிகள் காணப்படும். மையப்பகுதி சாம்பல் நிறமாகவும், சுற்றுப்பகுதி பழுப்பு நிறத்துடன் இருக்கும். நாளடைவில், இப்புள்ளிகள் இணைந்து பெரிய புள்ளியாக மாறி, பயிர் காய்ந்து விடும். தாக்கப்பட்ட கணுக்கள் மற்றும் கழுத்துப்பகுதி கருமையடைந்து, காற்று அடித்தவுடன் ஒடிந்து விடும். இதனால் மணிகள் பால் பிடிக்காமல் பதராகி மகசூல் இழப்பு ஏற்படும்.
தடுப்பு முறைகள் :
· வயல், வரப்புகளை களைகள் இல்லாமல் சுத்தமாக வைக்க வேண்டும்.
· நோய் தாக்கிய வயலில், தழைச்சத்து உரங்களை அதிகம் இடக்கூடாது.
· பயிரில் ஆரம்ப அறிகுறிகள் தென்பட்டவுடன் கீழ்கண்ட ஏதேனும் ஒரு மருந்தினை ஏக்கருக்கு போதுமான அளவு தண்ணீர் கலந்து கைத் தெளிப்பான் அல்லது விசைத் தெளிப்பான் மூலம் தெளிக்கவும்.
· அசாக்சிஸ்ட்ரோபின் – 25 SC 200 மி.லி.
· ட்ரைசைக்ளோசால் – 75 WP 200 கிராம்
· கார்பன்டசிம் – 50 WP 200 கிராம்