May 17, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

நெல் மூட்டைகளை கொள்முதல் செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்

கடலூர், ஏப்.24

தொரவளூர் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் தேக்கமடைந்த நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த தொரவளூர் நெல் கொள்முதல் நிலையத்தில், தொரவளூர், பரவளூர், விளாங்காட்டூர், பெரம்பலுார் கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் நெல்

மூட்டைகளை விற்பனை செய்கின்றனர். கடந்த மார்ச் 30ம் தேதியுடன் கொள்முதல் நிலையம் மூடப்பட்டது. இதனால் நெற்பயிர்களை விற்பனை செய்ய முடியாமல், விவசாயிகள்

அவதியடைந்தனர்.

இதுகுறித்து, வேளாண் இயக்குனருக்கு விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனர். அதைத்தொடர்ந்து, கடந்த 8ம் தேதி முதல் 15 தேதி வரை நீடிப்பு செய்யப்பட்டது. இந்த கால கட்டத்தில் அரசு

விடுமுறை தொடர்ந்து வந்ததால், நெல் கொள்முதல் செய்வதில் சிக்கல் ஏற்பட்டு, 5000 நெல் மூட்டைகள் தேக்கமடைந்தன.

இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள், நேற்று காலை 10.00 மணியளவில் வி.சி., மாநில பொதுச் செயலாளர் நீதிவள்ளல் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தைக்கு யாரும்

வராததால், அடுத்த கட்டமாக சாலை மறியல் செய்யப் போவதாக அறிவித்து கலைந்து சென்றனர்.

Spread the love