இன்று தழைசத்து உரங்களான யூரியா, அம்மோனியம் சல்பேட் பற்றாக்குறை ஆங்காங்கு நிலவுகிறது. தேவைக்கு அதிகமாக விவசாயிகள் ஒவ்வொரு வரும் போட்டி போட்டு கொண்டு உரங்களை இடுவதால் தங்களுடைய பணத்தையும், நேரத்தையும் விணாக்கி கொண்டு இருக்கின்றனர். ஜவுளிக்கடையில் பிளவுஸ் மேட்சிங் செய்து சரியான கலர் துணியை தேர்வு செய்வது போல, நெல்பயிருக்கான தழைசத்து போடுவதற்கான “மேட்சிங் பச்சை வண்ண அட்டை” ஜதராபாத்தில் உள்ள இந்திய நெல் ஆராய்ச்சி நிலையம், பயிரின் தேவை அறிந்து உரமிட, திருத்தப்பட்ட இலை வண்ண அட்டையை அறிமுகம் செய்தது. இதனை பயன்படுத்தி விவசாயிகள் இலையில் உள்ள தழைசத்து நிறத்தை அறிந்து அதற்கேற்ப உரமிடலாம். இந்த அட்டையில் 5 வண்ண பச்சை நிறங்கள் (1, 2, 3, 4, 5) கொடுக்கப்பட்டு இருக்கும். நெல் நடவு செய்த 20 நாள் முதல் பூக்கும் தருணம் வரை பயன்படுத்தலாம்.
எப்படி பயன்படுத்துவது?
காலை 7 -10 மணிக்குள், குறைந்தது 10 அளவுகள் பயிரின் இலை பரப்பில் உள்ள பச்சையை ஓப்பிட்டு பார்க்க வேண்டும். மேலும் இந்த அட்டையை பயன்படுத்தும்போது சூரிய ஒளி பயிரின் இலை பரப்பு மீது படாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட நெல் தாளின் நடுப்பகுதியை பச்சை வண்ண அட்டையில் உள்ள 3 அல்லது 4 ஆம் எண் நிறத்துடன் ஓப்பிட்டு பார்க்க வேண்டும். எடுக்கப்பட்ட அளவு 3க்குள் இருந்தால் மேலுரம் (TOP DRESSING) இடுவது உடனடி அவசியம். அளவு 4ஆக இருந்தால் மேலுரம் இடத் தேவையில்லை.
பயன்கள்?
பயன்படுத்துவதை எளிது.
தழைசத்து தேவையறிந்து இடுவதால் பணம் மற்றும் கால விரயம் தடுக்கப்படுகிறது.
அளவுக்கு மண் வளம் பாதிக்கப்படுவது தடுக்கப்படுகிறது.
பூச்சி, நோய் தாக்குதல் குறைய வாய்ப்புள்ளது.