October 17, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

நெல் விதைப்பண்ணையில் கலப்பினை தவிர்க்க கையாள வேண்டிய முறைகள்

  1. நாற்று நடுதல் மற்றும் நடவின் போது வெவ்வேறு இரகங்களை, வெவ்வேறு தினங்களில் பரித்து நடவு செய்திட வேண்டும்.
  2. நடவு முடிந்து மீதமாகும் நாற்றினை உடனடியாக அப்புறப்படுத்திட வேண்டும்.
  3. காலை 7 மணி முதல 11 மணி வரையிலும், மாலை 3 மணி முதல் 5 மணி வரை மட்டுமே கலவன் நீக்குதல் பணி மேற்கொள்ள வேண்டும்.
  4. அகற்றப்பட்ட கலவன்களை உடனடியாக அப்புறப்படுத்திட வேண்டும்.
  5. அறுவடை செய்யும் போது இயந்திரத்தில் வெளிவரும் முதல் 1 மூட்டையை விதைக்கு பயன்படுத்தக்கூடாது.
  6. அறுவடை முடிந்த உடன் விதையினை சுத்தமாக உலர் களத்தில் தனியாக உலர்த்திட வேண்டும்.
  7. விதைகளை காய வைத்த பிறகு புதிய கோணிப்பைகளில் சேமித்து வைத்தல் வேண்டும்.

இம்முறைகளை கையாண்டு கலப்பினை தவிர்த்து தரமான நெல் உற்பத்தி செய்து அளித்திடுமாறு நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை விதைப்பண்ணை உற்பத்தியாளர்களை, நாகப்பட்டினம் விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர் ஆர்.சுதா கேட்டுக்கொண்டார்.

Spread the love