August 14, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

நெல் விதைப்பண்ணையில் விதைச் சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர் ஆய்வு

மயிலாடுதுறை, ஜூலை 15

மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் வட்டாரம், பரசலூர் கிராமத்தில் தனியார் நிறுவனத்தால் அமைக்கப்பட்டுள்ள நெல் விதைப்பண்ணையை, 13.7.22 அன்று நாகப்பட்டினம், விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர் இர.சுதா ஆய்வு செய்தார்.

பரசலூர் கிராமத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இக்கிராமத்தில் வெங்கடேஷ் என்ற விவசாயி 7 ஏக்கர் பரப்பளவில் ADT 36 இரக ஆதார நிலை நெல் விதைப்பண்ணை அமைத்திருந்தார். இந்த விதைப்பண்ணையில் வயல் தரங்கள் குறித்தும், கலவன்கள் நீக்கப்பட்டுள்ளனவா, விதைச்சான்று நடைமுறைகள் சரிவர பின்பற்றப்பட்டுள்ளனவா என்பது குறித்து ஆய்வு செய்தார். பின்னர் செம்பனார்கோயில் வட்டாரம், திருக்கடையூர் அரசு விதைப்பண்ணையில் அமைந்துள்ள விதை சுத்தி நிலையத்தில் விதை சுத்திகரிப்பு பணிகள் மற்றும் பதிவேடுகளை ஆய்வு செய்தார். ஆய்வின்போது செம்பனார்கோயில் விதைச்சான்று அலுவலர் பிரியங்கா மற்றும் வேளாண்மை அலுவலர் (பண்ணை நிர்வாகம்) குமரன் ஆகியோர் உடனிருந்தனர்.

Spread the love