May 18, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

நெல் விவசாயிகளுடன் மாணவிகள் கலந்துரையாடல்

மதுரை, மார்ச் 15

மதுரை வேளாண் கல்லூரியில் இளங்கலை நான்காம் ஆண்டு பயிலும்

மாணவிகள் அஸ்வினி பிரியதர்ஷனி, ஆவணி, பவதாரணி, பூமிகா, பிளஸிஸ் கிஃப்டா, சின்றல்லா ஆகியோர் ஊரக வேளாண் பணி அனுபவ திட்டத்தின் ஒரு பகுதியாக கல்லணை ஊராட்சியில் “நெல் தொழில்நுட்பங்கள்” குறித்து கலந்துரையாடல் கூட்டம் நடத்தினர். இக்கூட்டத்திற்கு வேளாண் உதவி இயக்குநர் ராமசாமி, ஆமிணம்மாள் மற்றும் வேளாண் அலுவலர் வசந்த குமார் ஆகியோர் தலைமை வகித்தனர். இக்கூட்டத்தில் மாணவிகள் திருந்திய நெல் சாகுபடி, உயிர் உரங்களின் பயன்பாடு, நெல் தரிசு பயன்பாடு, வரப்பில் பயறு வளர்த்தல், நானோ யூரியா ஆகிய தொழில்நுட்பங்கள் குறித்து விவரித்தனர். மேலும், இக்கூட்டத்தில் மண் வள அட்டை குறித்த விழிப்புணர்வும் அளிக்கப்பட்டது. இதில் கலந்து கொண்ட விவசாயிகள் ஆர்வத்துடன் தொழில்நுட்பங்கள் குறித்தும், தங்கள் சந்தேகங்களையும் கலந்துரையாடி தெளிவு பெற்றனர்.

Spread the love