May 10, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

நேபாள ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் புராஜெக்ட் ஜீரோ இ-பைக்

நேபாளத்தைச் சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனம் உருவாக்கி உள்ள யாத்ரி புராஜெக்ட் ஜீரோ இ-பைக் தற்போது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்த கான்செப்ட் எலெக்ட்ரிக் பைக்கின் முன் பகுதியில் வட்ட வடிவ எல்இடி ஹெட்லேம்ப் வழங்கப்பட்டுள்ளது. இந்தப் பைக்கின் எடை 180 கிலோ. இதில் பேட்டரி தொகுப்பின் எடையே அதிகமாக உள்ளது.

இந்த எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளில், 8kWh லித்தியம்-நிக்கல்-மாங்கனீசு பேட்டரி தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் 48kW மோட்டாரும் கொடுக்கப்பட்டுள்ளது. 60 கிலோ மீட்டர் வேகத்தை வெறும் 2.5 வினாடிகளில் எட்டமுடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம் இந்த எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால், 230 கிலோ மீட்டர் வரை பயணம் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன் வீல் பகுதியில் 320 மிமீ டிஸ்க் பிரேக்கும், பின் வீல் பகுதியில் 240 மிமீ டிஸ்க் பிரேக்கும் கொடுக்கப்பட்டுள்ளன. இந்திய மதிப்பில் ரூ.19.45 லட்சம் விலையில் யாத்ரி ப்ராஜெக்ட் ஜீரோ எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பிரீமியம் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் பிரிவில் கொண்டுவரப் பட்டுள்ளதால் விலை அதிகமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த எலெக்ட்ரிக் பைக் ஏற்றுமதி செய்யப்படுமா என்பது குறித்த தகவல்கள் எதுவும் இல்லை.

Spread the love