September 21, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

நேரடி நெல் விதைப்பு தொழில் நுட்பம்

இராமநாதபுரம், செப்.13

தற்போது நிலவும் நீர்ப் பற்றாக்குறையைச் சமாளிக்கவும், வேளாண் தொழிலாளர்கள் பற்றாக்குறையைச் சமாளிக்கவும், நாற்றங்கால் பராமரிப்புச் செலவைக் குறைக்கவும், நேரடி நெல் விதைப்பு மிக அவசியமான ஒன்றாகும். விதைக்கும் கருவி மூலம் விதைக்க ஏக்கர் ஒன்றுக்கு 16 கிலோ விதையும், நேரடியாக கை விதைப்புச் செய்ய ஏக்கர் ஒன்றுக்கு 30 கிலோ விதையும் போதுமானது.

விதை கடினப்படுத்துதல்

ஒரு சதவீத பொட்டாசியம் குளோரைடு கரைசல் கொண்டு விதைகளைப் கடினப்படுத்துவதன் மூலம் ஆரம்பக் காலத்தில் நிலவும் வறட்சியினைத் தாங்கிப் பயிர் வளரும். இதற்கு ஒரு லிட்டர் நீரில் 10 கிராம் வீதம் மூரியேட் ஆப் பொட்டாஷ் உரத்தினைக் கலந்து தேவையான கரைசல் தயார் செய்து அக்கரைசலில் 350 மிலி எடுத்துக் கொண்டு அதில் ஒரு கிலோ விதையினை 5 மணி நேரம் ஊற வைத்து பின்பு நிழலில் உலர்த்தி விதைக்கலாம்.

இராமநாதபுரம் மாவட்டத்தில் விதைப்பண்ணை விவசாயிகள் நேரடி நெல் விதைப்புத் தொழில் நுட்பத்தைக் கடைப்பிடிக்கும் வழிமுறைகளைப் பின்பற்றுமாறு இராமநாதபுரம் மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்று உதவி இயக்குநர் சக்தி கணேஷ் தெரிவித்துள்ளார்.

Spread the love