June 25, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

நொச்சி

நொச்சி இதில் வெண் நொச்சி, கருநொச்சி, நீல நொச்சி என்ற வகை உண்டு. மூன்று அல்லது ஐந்து இலைகளை எதிரடுக்கில் பெற்ற சிறு மரம். இலைகள் வெகுட்டல் மணம் உடையவை. தானாக வளரக்கூடியவை. இலைகள், பட்டை ஆகியவை கருப்பு நிறம் அமைந்தது. கருநொச்சி என்றும் இயல்பாக கிடைக்கக்கூடிய வெண்நொச்சி இங்கே பார்ப்போம். இலை வேதனை தணித்தல், சிறுநீர் பெருக்குதல், நோய் நீக்கி உடல் நலம் பேணுதல், மாதவிலக்கு தூண்டுதல், நுண்புழுக் கொல்லுதல் ஆகிய குணங்களை உடையது. பட்டை, ஜுரம் போக்கி உடல் வலுவாகவும், சளி அகற்றி சிறுநீர் பெருக்கவும், பயன்படும். நொச்சி நுனா வேம்பு பொடுதலை வகைக்கு ஒரு பிடி ஒரு லிட்டர் நீரில் போட்டு 4 மிளகு ஒரு டீஸ்பூன் சீரகம் சேர்த்து கால் லிட்டராகக் காய்ச்சி 50 மில்லி வீதம் 3 வேளை 3 நாட்கள் கொடுக்க மாந்தம் தீரும். ஒரு பிடி நொச்சி இலை மூக்கிரட்டை வேர் காக்கரட்டான் வேர் வகைக்கு அரை பிடி சிதைத்து சுக்கு ஒரு துண்டு 6 மிளகு ஒரு டீஸ்பூன் சீரகம் ஆகியவற்றுடன் ஒரு லிட்டர் நீரில் போட்டு அரை லிட்டராகக் காய்ச்சி 30 மில்லி வீதம் காலை மாலை ஒரு வாரம் கொடுத்து வர தொடக்க நிலையில் உள்ள இளம்பிள்ளை வாதம் அதாவது போலிய தீரும்.

நன்றி : ASN சாமி அங்கக ஒருங்கிணைந்த விவசாய பண்ணை மற்றும் மூலிகை பண்ணை, ஆதனூர், திருவண்ணாமலை மாவட்டம், 94423 11505.

Spread the love