August 5, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

நோக்கியா 2720 வி பிளிப் போன் அமெரிக்காவில் அறிமுகம்

சென்னை, மே 15

எச்எம்டி குளோபல் நிறுவனம் தனது புதிய நோக்கியா 2720 வி பிளிப் போன் மாடலை அமெரிக்காவில் அறிமுகப்படுத்தியுள்ளது. குறிப்பாக இந்த சாதனம் பட்ஜெட் விலையில் அசத்தலான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சாதனத்தின் சிறப்பம்சங்களாவது: அமெரிக்காவில் வெரிசோனின் ஆன்லைன் ஸ்டோர் மற்றும் இன்-ஸ்டோர் மூலம் மே 20 முதல் விற்பனைக்கு வருகிறது இந்த நோக்கியா 2720 வி பிளிப் போன் மாடல் மாடல்.

512ஜிபி ரேம் மற்றும் 4ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த சாதனம். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்துவதற்கு ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

நோக்கியா 2720 வி பிளிப் மாடலில் 1500 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. பின்பு 2எம்பி ரியர் கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான மொபைல் போன். மேலும் நோக்கியா 2720 வி பிளிப் மாடலில் கூகுள் அசிஸ்டெண்ட் வசதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

யூடியூப், பேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற பிற ஆப் பயன்பாடுகளை ஆதரிக்கிறது இந்த நோக்கியா 2720 வி பிளிப் மாடல். இதுதவிர 4ஜி வோல்ட்இ, வைஃபை ஹாட்ஸ்பாட் கொண்ட Wi-Fi 802.11 b / g / n ஆதரவு,புளூடூத் 4.1 எல்இ, ஜிபிஎஸ்/ஏஜிபிஎஸ், மைக்ரோ யூ.எஸ்.பி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் அடக்கம்.

நோக்கியா 2720 வி பிளிப் மாடலின் விலை 79.99 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ.5875-ஆக உள்ளது. குறிப்பாக கருப்பு நிறத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது நோக்கியா 2720 வி பிளிப் மாடல்.

Spread the love