August 5, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

பங்கு வெளியீட்டு மூலம் ரூ.5000 கோடி திரட்ட நுவோகோ விஸ்டாஸ்’ நிறுவனம் திட்டம்

புது தில்லி, மே 8

பிரபல, நிர்மா’ குழுமத்தைச் சேர்ந்த, நுவோகோ விஸ்டாஸ் கார்ப்பரேசன் நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டுக்கு செபியிடம் விண்ணப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இது குறித்து விரிவான செய்தியாவது:

நுவோகோ விஸ்டாஸ் கார்ப்பரேசன் புதிய பங்கு வெளியீட்டின் வாயிலாக, ரூ.5 ஆயிரம் கோடியை திரட்ட திட்டமிட்டுள்ளது.

இதில், ரூ.1,500 கோடிக்கு புதிய பங்குகளையும், ரூ.3,500 கோடிக்கு பங்குதாரர்கள் பங்குகளையும் விற்பனை செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது.

புதிய பங்கு வெளியீட்டின் வாயிலாக திரட்டப்படும் தொகையை கொண்டு, கடன்களை அடைக்கவும், பொதுவான நிர்வாக செலவுகளுக்கு பயன்படுத்தவும் இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

மேலும், இந்நிறுவனம், சிமென்ட் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது. இதன் ஆலைகளின் வாயிலாக, ஆண்டு ஒன்றுக்கு கிட்டத்தட்ட, 2.23 கோடி டன் சிமென்ட் தயாரிக்கப்படுகிறது. இந் நிறுவனத்துக்கு மொத்தம், 11 தொழிற்சாலைகள் உள்ளன. சத்தீஷ்கர், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம், ராஜஸ்தான், ஹரியானா ஆகிய மாநிலங்களில் ஆலைகள் உள்ளன. கடந்த ஆண்டு பிப்ரவரியில், “இமாமி’ நிறுவனத்திடமிருந்து ஆண்டுக்கு, 83 லட்சம் டன் சிமென்ட் வணிகத்தை, ரூ.5,500 கோடிக்கு கையகப்படுத்த இருப்பதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

Spread the love