- தக்கை பூண்டு
வயது : 40 முதல் 45 நாட்கள்
மகசூல் அளவு : 10 டன் ஏக்கருக்கு
தழைச்சத்தின் அளவு 96 கிலோ ஏக்கருக்கு
சிறப்பியல்புகள் : களர் மற்றும் உவர் நிலங்களிலும் வளரும் தன்மை உடையது. - சணப்பு
வயது : 60 நாட்கள்
மகசூல் அளவு : 12.24 டன் ஏக்கருக்கு
தழைச்சத்தின் அளவு 134 கிலோ ஏக்கருக்கு
சிறப்பியல்புகள் : நிழலில் வளரும், தோட்டக்கால் நிலங்களுக்கு ஏற்றது. தென்னையில் ஊடுபயிராக சாகுபடி செய்திடலாம். - மணிலா அகத்தி
வயது : 60 நாட்கள்
மகசூல் அளவு : 10 – 12 டன் ஏக்;கருக்கு
தழைச்சத்தின் அளவு 133 கிலோ ஏக்கருக்கு
சிறப்பியல்புகள்: தண்டு பகுதியிலும் வேர் முடிச்சி உள்ளது. அதில் தழைச்சத்தினை சேமித்து வைக்கும். - கொளுஞ்சி
வயது : 100 நாட்கள்
மகசூல் அளவு : 5 டன் ஏக்கருக்கு
தழைச்சத்தின் அளவு 85 கிலோ ஏக்கருக்கு
சிறப்பியல்புகள் : கொளுஞ்சி பயிரிட்ட வயலில் நுற்புழுவின் தாக்குதல் குறையும். - நரிப்பயிர்
வயது: 60 நாட்கள்
மகசூல் அளவு : 10 டன் ஏக்கருக்கு
தழைச்சத்தின் அளவு 102 கிலோ ஏக்கருக்கு
சிறப்பியல்புகள் : குறைவான இடத்தில் அதிக மகசூல் தரவல்லது. - தட்டைப்பயறு
வயது : 60 நாட்கள்
மகசூல் அளவு : 9.5 டன் ஏக்கருக்கு
தழைச்சத்தின் அளவு 74 கிலோ ஏக்கருக்கு
சிறப்பியல்புகள் : வறட்சியை தாங்கும் தன்மையுடையது.
தகவல் : ஆர்.சுதா, விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர், நாகப்பட்டினம்.
Spread the love