May 18, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

பசுந்தாள் உரப்பயிர்களின் முக்கியத்துவம்

இரசாயன உரங்கள் இல்லாத காலத்தில், பசுந்தாள் உரங்களை பெரிதும் பயன்படுத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. சரியான அளவு இயற்கை உரங்களை இடுவதர் மண்ணின் வளம், பயிரின் உயர் விளைச்சல், தரமான சுற்றுப்புறச் சுழ்நிலை ஆகியவை பாதுகாக்கப்படுகின்றன.

கோடை மழையினை பயன்படுத்தி நிலத்தினை உழுது பசுந்தாள் பயிர்களான சணப்பை, தக்கை பூண்டு மற்றும் மணிலா அகத்தி ஆகியவை நெற்பயிரிடும் வயல்களுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

பசுந்தாள் உரங்களின் சிறப்பியல்புகள்:
· தழைச்சத்தை மண்ணில் நிலைப்படுத்துவதால் மண்ணின் வளத்தைப் பாதுகாக்கிறது.
· எளிதில் மக்கும் தன்மை உடையது.
· மண்ணில் இடுவதால் மண்ணில் உள்ள நுண்ணுயிர்களின் செயல்களை ஊக்குவிக்கிறது.
· மண்ணின் கட்டமைப்பை சீராக்குகிறது. மண்ணின் நீர்பிடிப்பு தன்மையினை அதிகரிக்கிறது.
· மண்ணின் வளம் நீடிக்கிறது.

இத்தகவலை நாகப்பட்டினம், விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர், ஆர்.சுதா விவசாயிகளுக்கு தெரிவித்துள்ளார்.

Spread the love