சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வட்டாரம் வேளாண்மை உதவி இயக்குநர் ரா.பத்மாவதி, மண் வகைகளில் கரிமப் பொருட்கள் அல்லது அங்ககப் பொருட்களின் அளவும், தழைச்சத்தின் அளவும் மிகக்குறைவாக உள்ளன. மண்வள மேம்பாட்டில் இவையிரண்டும் இரண்டு கண்களாகும். எனவே மண்வளத்தை மேம்படுத்துவதற்கு மண் வகைகளில் கரிமப்பொருள் மற்றும் தழைச்சத்தின் அளவை அதிகப்படுத்துதல் மிகவும் அவசியமாகும். கரிம, தழைச்சத்தினைப் பெறுவதற்கு பசுந்தாள் உரமிடுதல் அவசியம். பண்டைய காலங்களில், இரசாயன உரங்கள் பயன்பாட்டில் இல்லாத காரணத்தால் இயற்கை உரங்களை, குறிப்பாக பசுந்தாள் உரங்களை நம்பியே நம் வேளாண்மை இருந்து வந்திருக்கிறது.
பசுந்தாள் உரங்களில் உள்ள சத்துக்களின் அளவு
வ.எண் பசுந்தாள் உரப்பயிர்
தழைச்சத்து மணிச்சத்து சாம்பல் சத்து
(சதம்) (சதம்) (சதம்)
- சணப்பை 2.60 0.60 2.00
- தக்கைப்பூண்டு 2.30 0.70 1.30
- கொளிஞ்சி 1.80 0.40 0.30
பசுந்தாள் உரங்களின் சிறப்புகள்
· தழைச்சத்தை மண்ணில் நிலைப்படுத்துவதால் மண்ணின் வளத்தைப் பாதுகாக்கிறது.
· எளிதில் மக்கும் தன்மை உடையது.
· மண்ணில் இடுவதால் மண்ணில் உள்ள நுண்ணுயிர்களின் செயல்களை ஊக்குவிக்கிறது. இதனால் பயிருக்குத் தேவையான உணவுப் பொருட்கள் விரைவில் கிடைக்க ஏதுவாகிறது.
· மண்ணின் கட்டமைப்பையும் நன்றாகச் சீராக்குகிறது. அதன் மூலம் மண்ணிற்கு அதிக அளவு நீரைத் தக்க வைத்துக் கொள்ளும் திறனும் ஏற்படுத்துகிறது.
· பயிருக்குத் தேவையான சத்துக்களை மண்ணின் அடிப்பாகத்திலிருந்து மேற்பகுதிக்கு கொண்டு வருவதால், மண்ணின் வளம் நீடிக்கப் பயன்படுகிறது.
பசுந்தாள் உரப்பயிர் சாகுபடி முறைகள்
சாகுபடி விபரம் சணப்பை சித்தகத்தி கொளிஞ்சி
பருவம் எல்லா பருவங்களுக்கும் ஏற்றது போதிய ஈரப்பதம் மண்ணில் இருப்பின் அனைத்து பருவங்களுக்கும் ஏற்றது போதிய ஈரப்பதம் மண்ணில் இருப்பின் அனைத்து பருவங்களுக்கும் ஏற்றது
மண் வண்டல் மண் சிறந்தது எல்லா நிலங்களிலும் வளரும் எல்லா நிலங்களிலும் வளரும்
விதை அளவு 25-35 கிலோ / எக்டர் 30-40 கிலோ / எக்டர் 15-20 கிலோ / எக்டர்
இடைவெளி 30×10 செ.மீ அல்லது கை விதைப்பு முறை கை விதைப்பு முறை கை விதைப்பு முறை
நீர்ப்பாசனம் 15-20 நாட்களுக்கு 15-20 நாட்களுக்கு 30-40 நாட்களுக்கு
உரம் மற்றும் பயிர் பாதுகாப்பு தேவையில்லை தேவையில்லை தேவையில்லை
அறுவடை விதைத்த 40-50 நாட்களில் மண்ணில் மடித்து உழுது விட வேண்டும் விதைத்த 40-60 நாட்களில் மண்ணில் மடித்து உழுது விட வேண்டும் விதைத்த 60 நாட்களில் மண்ணில் மடித்து உழுது விட வேண்டும்
பசுந்தாள் விளைச்சல் 13-15 டன் / எக்டர் தழை 15-18 டன் / எக்டர் தழை 6-7 டன் / எக்டர் தழை
சாகுபடி விபரம் மணிலா அகத்தி தக்கை பூண்டு நரிப்பயறு
பருவம் எல்லா பருவங்களுக்கும் ஏற்றது போதிய ஈரப்பதம் மண்ணில் இருப்பின் அனைத்து பருவங்களுக்கும் ஏற்றது எல்லா பருவங்களுக்கும் ஏற்றது
மண் களிமண் மற்றும் செம்மண் எல்லா நிலங்களுக்கும் களிமண், நெல், வயல்
விதை அளவு 40 கிலோ / எக்டர் 50 கிலோ / எக்டர் 10-15 கிலோ / எக்டர்
இடைவெளி கை விதைப்பு முறை கை விதைப்பு முறை கை விதைப்பு முறை
நீர்ப்பாசனம் 15-20 நாட்களுக்கு 15-20 நாட்களுக்கு 25-30 நாட்களுக்கு
உரம் மற்றும் பயிர் பாதுகாப்பு தேவையில்லை தேவையில்லை தேவையில்லை
அறுவடை விதைத்த 40-50 நாட்களில் மண்ணில் மடித்து உழுது விட வேண்டும் விதைத்த 40-60 நாட்களில் மண்ணில் மடித்து உழுது விட வேண்டும் விதைத்த 40-50 நாட்களில் மண்ணில் மடித்து உழுது விட வேண்டும்