விருதுநகர், மே 6
பசுந்தாள் உரப் பயிர் சாகுபடி செய்து மண் வளத்தை பாதுகாக்கவும் பசுந்தாள் உரங்களை நிலங்களில் வளர்த்து மடக்கி உழுது பயிரிடுவதன் மூலம் பயிரின் உரத்தேவையை நல்ல முறையில் பயன்படுத்தலாம் என விருதுநகர் விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர் த.சுப்பாராஜ் தெரிவித்தார்.
இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது, இரசாயன உரங்கள் இல்லாத காலத்தில் இயற்கை உரங்களை குறிப்பாக பசுந்தாள் உரங்களை வேளாண்மைக்கு விவசாயிகள் பயன்படுத்தியுள்ளனர். விவசாயிகள் உயர் விளைச்சல் ரகங்கள் பயிரிடுவதால் போதுமான அளவு இயற்கை உரங்கள் கிடைக்க வாய்ப்பில்லை. சாகுபடி செய்யக்கூடிய பயிர்களுக்கு போதுமான அளவு இயற்கை உரங்கள் எதுவும் இல்லை. ஆதனால் மண் வளம் மற்றும் சுற்றுப்புறச்சூழல் பாதிப்படைகிறது. இதனால் பயிரின் விளைச்சல் குறைந்த கொண்டே வருகிறது. இதைத் தடுக்க பசுந்தாள் உரப் பயிர்கள் இடுவதால் தழைச்சத்து மண்ணில் நிலைபடுத்துவதால் மண்ணின்வளம் பாதுகாக்கப்படுகிறது. மண்ணில் உள்ள நுண்ணுயிரிகளின் செயல்பாடுகளை ஊக்குவிக்கிறது.