August 15, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

பசுந்தீவனம் உற்பத்தி தொழில் நுட்பங்கள் பற்றிய பயிற்சி

புதுக்கோட்டை, ஜூன் 29

புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி வட்டாரம், பெருமருதூர் கிராமத்தில் மாநில விரிவாக்க திட்டத்தின் உறுதுணை சீரமைப்பு திட்டத்தின் கீழ் 2022-23 ஆண்டிற்கான மாவட்ட அளவிலான விவசாயிகள் பயிற்சி நடைபெற்றது. இந்த பயிற்சியை உதவி தொழில்நுட்ப மேலாளர் கவியரசி வரவேற்புரை கூறி பயிற்சியை தொடங்கி வைத்தார். பயிற்சியில் பெருமருதூர் பஞ்சாயத்து தலைவர் கா.முத்துக்குமார், உழவன் நண்பன் சு.ராதாகிருஷ்ணன், ஊர்த்தலைவர் மு.உமாபதி பிள்ளை மற்றும் உதவி வேளாண்மை அலுவலர் பார்கவி ஆகியோர் முன்னிலையில் கால்நடை உதவி மருத்துவர் முனைவர் எஸ்.செல்வம், பசுந்தீவனம் உற்பத்தி தொழில்நுட்பம் பற்றி விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தார்.

கறவை மாடு வளர்ப்பதற்கு கால்நடைகள் வாங்கும் போது கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள் பற்றி கூறினார். கால்நடை தீவனங்கள் வளர்ப்பு, கால்நடைகளுக்கு கொடுக்க வேண்டிய சரிவிகித தீவன முறைகள், தாது உப்புக்கலவை, பால் உற்பத்தியை அதிகப்படுத்துவதற்கான வழிமுறைகள், நோய்களுக்கு எதிரான தடுப்பூசிகள், மருந்துகள், குடற்புழு நீக்கும் முறைகள், சினை ஊசி போடும் கால இடைவெளிகள் பற்றி கூறினார். கன்றுக்குட்டி பராமரிப்பு, கன்று முதல் ஈத்து வரையிலான தடுப்பூசி கால இடைவெளிகள் பற்றி கூறினார். செயற்கை கருவூட்டல் தொழில்நுட்பங்கள் மற்றும் தீவன புல் இரகங்கள் வளர்ப்பு முறைகள் பற்றி கூறினார்.

பயிற்சியின் போது துணை திட்ட இயக்குநர் (அட்மா) / வேளாண்மை துணை இயக்குநர் மா.பெரியசாமி, வருகை புரிந்து பயிற்சியில் கலைஞரின் ஒருங்கிணைந்த கிராம வளர்ச்சித் திட்டம் பற்றிய செயல்பாடுகள், மானிய விவரங்கள், திட்டம் பற்றிய சாராம்சங்கள் பற்றி விளக்கவுரை வழங்கினார். இத்திட்டத்தில் விவசாயத்துறை மட்டுமல்லாது அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டு கிராம மக்களின் தேவைகளை பூர்த்தி செய்து தரும் என்று கூறினார். பின்னர் விவசாயிகளின் சந்தேகங்களுக்கு விளக்கமளித்தார். பயிற்சியின் முடிவில் பெருமருதூர் ஊர்த்தலைவர் மு.உமாபதி பிள்ளை நன்றி உரை கூறினார். பயிற்சிக்கான ஏற்பாடுகளை வட்டார தொழில்நுட்ப மேலாளர் சரவணன், உதவி தொழில்நுட்ப மேலாளர் கவியரசி, உதவி வேளாண்மை அலுவலர் பார்கவி மற்றும் உழவன் நண்பன் சு.ராதாகிருஷ்ணன் ஆகியோர் செய்தனர்.


Spread the love