July 25, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

பசுந்தேயிலைக்கு விலை நிர்ணயம்

ஊட்டி, மே 4

தேயிலை வாரியம் சார்பில், இம்மாதத்திற்கான பசுந்தேயிலைக்கு, ரூ.18.63 விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து குன்னூரில் உள்ள இந்திய தேயிலை வாரிய செயல் இயக்குனர் பாலாஜி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : நீலகிரி மாவட்டத்தில், சிறு தேயிலை தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யும் தேயிலை தூள், ஏல மையங்களில் ஏலம் விடப்படுகிறது. இதன் விலையை அடிப்படையாக வைத்து, பசுந்தேயிலைக்கு குறைந்தபட்ச விலை, கடந்த, 2015ம் ஆண்டில் இருந்து நிர்ணயம் செய்யப்படுகிறது.

கடந்த ஏப்ரல் மாத ஏல அடிப்படையில், இந்த மாதத்திற்கான பசுந்தேயிலைக்கு, கொள்முதல் விலையாக கிலோவுக்கு, ரூ.18.63 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு குறைந்தபட்ச விலை வழங்காத தொழிற்சாலைகளை, கண்காணித்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

Spread the love