January 24, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

பசுந்தேயிலை பறிக்க விவசாயிகள் திணறல்

ஊட்டி, மே 17

கரோனா ஊரடங்கு காரணமாக, போக்குவரத்து வசதி இல்லாததால், பசுந்தேயிலை பறிக்க முடியாமல் விவசாயிகள் திணறி வருகின்றனர்.

நீலகிரி மாவட்டம், தேயிலை உற்பத்திக்கு பிரசித்தி பெற்ற மாவட்டமாகும். கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால், தேயிலை தோட்டங்களில் பசுந்தேயிலை வரத்து அதிகரித்துள்ளது. ஒரு கிலோ பசுந்தேயிலைக்கு, ரூ.20க்கு குறையாமல் விலை கிடைத்து வருகிறது. இதனால், விவசாயிகள் ஓரளவு ஆறுதல் அடைந்துள்ளனர். உள்ளூரில் போதிய தொழிலாளர்கள் இல்லாததால், வாகனங்களில் தொழிலாளர்களை அழைத்து வந்து, விவசாயிகள் பசுந்தேயிலை பறித்து வந்தனர். இந்நிலையில், கரோனா ஊரடங்கு காரணமாக, போக்குவரத்து வசதி இல்லாததால், பெரும்பாலான தொழிலாளர்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர். வாகன வசதி இல்லாத பல விவசாயிகள், தொழிலாளர்களை அழைத்து வர முடியாத நிலை உள்ளது. இதனால், பசுந்தேயிலை பறிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. பசுந்தேயிலை வரத்து அதிகரித்துள்ள நிலையிலும், விவசாயிகளால் பறிக்க முடியாத நிலை உள்ளது. எனவே, கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் பெரும்பாலான தேயிலை தோட்டங்களில் பசுந்தேயிலை வளர்ந்து, முதிர்ந்து வருகிறது. இதே நிலை நீடித்தால், அறுவடைக்கு தயாரான பசுந்தேயிலை, கரட்டு இலையாக மாறி, விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படும் அபாயம் உள்ளது என விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.

Spread the love