July 24, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

பஜாஜ் கன்ஸ்யூமர் கேர் நிறுவனத்தின் லாபம் நான்காவது காலாண்டில் இரு மடங்கு உயர்வு

மும்பை, ஏப்.20

நான்காவது காலாண்டில் எஃப்எம்சிஜி துறையைச் சேர்ந்த பஜாஜ் கன்ஸ்யூமர் கேர் நிறுவனத்தின் நிகர லாபம் 2 மடங்கு உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் பங்குச் சந்தையிடம் தெரிவித்துள்ளதாவது:

கடந்த மார்ச் 31ம் தேதியுடன் முடிவடைந்த நான்காவது காலாண்டில் நிறுவனம் செயல்பாடுகள் மூலமாக ரூ.54.67 கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளதாக தெரிவித்துள்ளது. இது, நிறுவனம் முந்தைய நிதியாண்டின் ஜனவரி-மார்ச் காலகட்டத்தில் ஈட்டிய லாபம் ரூ,.23.29 கோடியுடன் ஒப்பிடும்போது இரு மடங்கு அதிகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், கணக்கீட்டு காலாண்டில் நிறுவனத்துக்கு பொருள்கள் விற்பனையின் மூலமாக கிடைத்த வருமானம் ரூ.172 கோடியிலிருந்து ரூ.244.86 கோடியாக அதிகரித்துள்ளது. மொத்த செலவினம் ரூ.158.69 கோடியிலிருந்து 19.21 சதம் அதிகரித்து ரூ.189.17 கோடியானது. கடந்த 2020-21ம் நிதியாண்டில் நிறுவனத்தின் நிகரலாபம் ரூ.184.77 கோடியிலிருந்து 20.76 சதம் உயர்ந்து ரூ.223.13 கோடியாகவும், வருவாய் ரூ.825.75 கோடியிலிருந்து 9.61 சதம் உயர்ந்து ரூ.905.15 கோடியாகவும் இருந்தது என பஜாஜ் கன்ஸ்யூமர் தெரிவித்துள்ளது.

அண்மையில் நடந்த பஜாஜ் கன்ஸ்யூமர் இயக்குநர் குழு கூட்டத்தில் 400 சத இறுதி ஈவுத்தொகை வழங்க பரிந்துரை செய்யப்பட்டது. இதையடுத்து 2020-21 நிதியாண்டுக்கு ரூ. 1 முகமதிப்பு கொண்ட பங்கு ஒன்றுக்கு ரூ.4 ஈவுத்தொகையாக கிடைக்கும் என பஜாஜ் கன்ஸ்யூமர் பங்குச் சந்தைக்கு அளித்த மற்றொரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Spread the love