சிவகங்கை, மாரச் 8
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் ரா.பத்மாவதி, பஞ்சகவ்யா தயாரிக்கும் முறை மற்றும் பயன்படுத்தும் முறை, பஞ்சகவ்யா பயன்பாடு பற்றியும் எடுத்துரைத்தார். பஞ்சகவ்யா என்பது பயிர்களின் வளர்ச்சியை மேம்படுத்தவும், எதிர்ப்பு சக்தியினை அளிக்கக் கூடியதுமான இயற்கையான தயாரிப்பாகும். இதில் பயிர் வளர்ச்சிக்குத் தேவையான முக்கியச் சத்துக்கள், நுண்ணூட்டச்சத்துக்கள் மற்றும் பயிர் வளர்ச்சி ஊக்கிகள் (IAA, GA) ஆகியவை உள்ளன.
பஞ்சகவ்யாவில் பால் பொருட்கள், வெல்லம் அல்லது கரும்புச்சாறு சேர்க்கப்படுவதால், இவற்றில் ஈஸ்ட் மற்றும் லேக்டோபேசிலஸ் போன்ற நொதிக்க வைக்கக்கூடிய நுண்ணுயிர்களின் ஆதிக்கம் அதிகளவில் உள்ளது.
பஞ்சகவ்யா பயன்படுத்தும் முறை
பஞ்சகவ்யாவை 3% கரைசலாக தெளிக்க வேண்டும். (3 லிட்டர் கரைசலை 100 லிட்டர் தண்ணீரில் கரைத்து அனைத்து பயிர்களுக்கும் தெளிக்கலாம்.) பஞ்சகவ்யாவை ஒரு எக்டருக்கு 50 லிட்டர் வீதம் மண் வழியாகவோ அல்லது சொட்டு நீர்ப்பாசனம் மூலமாகவோ கொடுக்கலாம். விதை நேர்த்தியாக 3% கரைசலில் விதைகளை 20 நிமிடங்கள் மூழ்க வைத்து பின்னர் உலர வைத்து விதைக்கலாம். மஞ்சள், இஞ்சி போன்ற வேர்க் கிழங்கு வகைகள் மற்றும் கரும்பு விதைக் கரணைகளை 30 நிமிடங்கள் மேற்கண்ட கரைசலில் மூழ்க வைத்து பின்னர் நடவு செய்யலாம்.
பஞ்சகவ்யாவை முக்கியமான பயிர்நிலைகளில் வளர்ச்சி ஊக்கியாகவும் தெளிக்கலாம்.
வ.
எண் பயிர்கள் பஞ்சகவ்யா 3% கரைசலாக தெளிக்க வேண்டிய காலம்
- நெல் நடவு செய்த 10,15,30 மற்றும் 50-வது நாளில்
- சூரியகாந்தி விதைத்த 30,45 மற்றும் 60-வது நாளில்
- உளுந்து மானாவாரி-பூ பூக்க ஆரம்பிக்கும் காலம் மற்றும் அதிலிருந்து 15 நாட்கள் கழித்து ஒருமுறை தெளிக்கலாம்.
இறவை-விதைத்த 15, 25 மற்றும் 40-வது நாளில் - பச்சைப்பயறு விதைத்த – 15, 25,30, 40 மற்றும் 50-வது நாளில்
- ஆமணக்கு விதைத்த -30 மற்றும் 45-வது நாளில்
- நிலக்கடலை விதைத்த 25 மற்றும் 30-வது நாளில்
- வெண்டை விதைத்த 30,15,60 மற்றும் 75-வது நாளில்
- முருங்கை பூ பூப்பதற்கு முன் மற்றும் காய்பிடிக்கும் தருணத்தில்
- தக்காளி நாற்றங்கால் மற்றும் நடவு செய்த 40-வது நாளில் 1% கரைசலில் 12 மணி நேரம் விதை நேர்த்தி செய்ய வேண்டும்.
- ரோஜா செடிகளை வெட்டிக் களைக்கும் போதும், பூ மொட்டு விடும் போதும்
- மல்லிகை பூ அரும்புகள் விடும் போதும்
- மர வகைகள் முதல் தெளிப்பு – பூப்பதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு
இரண்டாம் தெளிப்பு – பூ பூத்த 15 நாட்கள் கழித்து
மூன்றாம் தெளிப்பு – பழங்கள் பட்டாணி அளவில் உள்ள போது
நான்காம் தெளிப்பு – அறுவடை முடிந்தவுடன்
13 இலை வகைப் பயிர்கள் கீரைகள், கருவேப்பிலை, டீ மற்றும் காப்பி வகைகளுக்கு, 2% பஞ்சகவ்யா கரைசலை வாரத்திற்கு ஒரு முறை தெளிக்க வேண்டும்.