June 25, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

பஞ்சகாவியா தயாரிப்பு பயிற்சியில் வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப கல்லூரி மாணவர்கள்

திருச்சி, ஏப்.21

திருச்சி மாவட்டம், வையம்பட்டி கிராம தங்கல் திட்டத்தின் கீழ் பயிற்சி பெறும் எஸ்.ஆர்.எஸ் வேளாண்மை மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்களான விஷ்ணு.ம.ர, சிவகுமார்.பா, தரணீதரன்.த, தீனதயாளன்.பொ, புஷ்பராஜ்.மா, மதன்குமார்.க, விக்னேஷ்.ம, நவீன்.ச ஆகியோர் பஞ்சகாவியா தயாரிக்கும் முறை பற்றியும் அதன் பயன்களைப் பற்றியும் வையம்பட்டி அருகே உள்ள கம்பளத்துபட்டி விவசாயிகளுக்கு எடுத்துரைத்தனர்.

தேவையானபொருட்கள் :
பசுஞ்சாணம்-5 கி, பசுவின் கோமியம்-3லி, பசும்பால்-2லி, தயிர்-2லி, நெய்-1லி.

தயாரிக்கும் முறை :
பசுஞ்சாணம் 5 கிலோவுடன் பசுமாட்டு நெய் 1 லிட்டர் கலந்து ஒரு பிளாஸ்டிக் வாளியில் 3 நாட்கள் வைத்து தினமும் காலை, மாலை என இரு முறை இதைப் பிசைந்து விட வேண்டும்.
நான்காவது நாள் மற்ற பொருட்களான தயிர், பசும்பால், கோமியம், மற்றும் பசுஞ்சாணம் நெய் கலவையை ஒரு பிளாஸ்டிக் தொட்டியில் எடுத்துக் கொண்டு நன்கு கலக்கவும். நன்கு கலந்த கலவை நைலான் கொசு வலையை கொண்டு மூடி நிழலில் வைக்க வேண்டும். ஒரு நாளைக்கு காலை, மாலை இருமுறை வீதம் காலையிலும், மாலையிலும் 20 நிமிடங்கள் கிளறிவிட வேண்டும். இவ்வாறு தொடர்ந்து 21 நாட்களுக்கு கிளறிவிட வேண்டும். 21 நாட்களுக்கு பிறகு பஞ்சகாவியத்தை பயன்படுத்தலாம்.

பயன்படுத்தும் அளவு :
பயிர்களுக்கும், மரங்களுக்கும் பஞ்சகாவியா தெளிக்கும் முறை வேறுபடுகிறது. பொதுவாக ஒரு ஏக்கர் பயிருக்கு 3.5 லிட்டரும், மரங்களுக்கு 4.7 லிட்டரும் ஒருமுறை தெளிவு ஏற்படும்.
பஞ்ச காவியத்தை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 30 மில்லி பஞ்சகவ்யம் என்ற அளவில் கலந்து 15-30 நாட்கள் இடைவெளியில் பயிர்களுக்கு தெளிக்கலாம். பஞ்சகாவ்யா கரைசலை எல்லா தானிய பயிர்களுக்கும், பூச்செடிகளுக்கும், பல மரங்களுக்கும் வளர்ச்சி ஊக்கியாக தெளிக்கலாம்.

நன்மைகள் :
பஞ்ச காவியத்தில் பயிருக்குத் தேவையான தழை, மணி, சாம்பல் சத்துக்கள், நுண்ணூட்டச் சத்துக்கள் மற்றும் பயிர் வளர்ச்சி ஊக்கிகளான இண்டோல் அசிடிக் அமிலம் மற்றும் சிட்ரிக் அமிலம் ஆகியவையும் உள்ளது. இது தாவரங்களுக்கு அதிகப்படியான வளர்ச்சியையும், மகசூலையும் கொடுப்பது மட்டுமல்லாமல் பயிர்களையும், மரங்களையும், பூச்சி மற்றும் நோய்களிடம் இருந்து பாதுகாத்து இயற்கைக்கு தீங்கு விளைவிக்காத பூச்சிக்கொல்லி ஆகும் வளர்ச்சி விகிதம் செயல்படுகிறது.

கிராம தங்கல் திட்டத்தின் குழு ஒருங்கிணைப்பாளர்கள் : இரா.அருண்குமார், ஜெ.சுந்தரம் மற்றும் சி.க.நிவேதா, உதவிப் பேராசிரியர்கள், எஸ்.ஆர்.எஸ் வேளாண்மை மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, வேடசந்தூர், திண்டுக்கல் மாவட்டம்-624 710.

Spread the love