இன்ஃபினிக்ஸ் நிறுவனம் தனது புதிய இன்பினிக்ஸ் ஹாட் 10எஸ் ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஏற்கனவே இந்தோனேசியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து இந்தியாவில் தற்போது பட்ஜெட் விலையில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இன்பினிக்ஸ் ஹாட் 10எஸ் ஸ்மார்ட்போன் மாடலில் 6.82-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே ஆனது 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 180 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் அம்சங்களைக் கொண்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போனில் மீடியாடெக் ஹீலியோ ஜி85, 12என்எம் சிப்செட் புராஸசர் மற்றும் கார்டெக்ஸ்-ஏ75 கோர் வன்பொருள் வசதியுடன் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தில் செயல்படும்.
பின்புறம் 48எம்பி பிரைமரி லென்ஸ், 2எம்பி டெப்த் சென்சார், ஏஐ கேமரா என டிரிபிள் கேமரா அமைப்பு உள்ளது. முன்புறம் 8எம்பி செல்பீ கேமராவை கொண்டுள்ளது
இந்த ஸ்மார்ட்போனில் 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்துவதற்கு ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.
இன்பினிக்ஸ் ஹாட் 10எஸ் ஸ்மார்ட்போனில் 6000 எம்ஏஎச் பேட்டரி உள்ளது. மேலும் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. கைரேகை சென்சார், டி.டி.எஸ் ஆடியோ மற்றும் டார்-லிங்க்அல்டிமேட் கேம் பூஸ்டர் போன்ற அம்சங்களும் இடம்பெற்றுள்ளது.
4ஜிபி ரேம் கொண்ட இன்ஃபினிக்ஸ் ஹாட் 10எஸ் ஸ்மார்ட்போனின் விலை ரூ.9,999-ஆக உள்ளது, பின்பு இதன் 6ஜிபி ரேம் கொண்ட வேரியண்டின் விலை ரூ.10,999-ஆக உள்ளது.