August 8, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

பட்ஜெட் விலையில் 5ஜி போன் ரியல்மி8 5ஜி ஸ்மார்ட்போன்

ரியல்மி நிறுவனத்தின் அடுத்த அதிரடி அறிமுகமாக ரியல்மி8 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வழக்கம் போல இந்த ஸ்மார்ட்போனும் பட்ஜெட் விலையிலேயே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட வேரியண்டை ரூ.13,999-விலையிலும், 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி வேரியண்ட் ரூ.14,999 விலையிலும், 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி வேரியண்ட் ரூ.16,999 விலையிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சூப்பர்சோனிக் பிளாக் மற்றும் சூப்பர்சோனிக் ப்ளூ போன்ற நிறங்களில் இந்த சாதனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ரியல்மி 8 5ஜி ஸ்மார்ட்போனில் 6.5-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் தெளிவுடன், 1,080×2,400 பிக்சல் துல்லியம், 20:9 திரைவிகிதம், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 600 nits பிரைட்னஸ் கொண்ட டிஸ்பிளேவைப் பெற்றுள்ளது.

புதிய மீடியாடெக் Dimensity 700 5ஜி சிப்செட் புராஸசர் மற்றும் ஏஆர்எம் மாலி-ஜி52 எம்சி2 ஜிபியு வன்பொருளுடன் Realme UI 2.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தில் செயல்படும்.

ரியல்மி 8 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார், 2எம்பி மேக்ரோ சென்சார், 2எம்பி மோனோகுரோம் சென்சார் என டிரிபிள் கேமரா அமைப்பு உள்ளது. மேலும் 16எம்பி செல்ஃபீ கேமரா உள்ளது. பின்பு நைட்ஸ்கேப், 48 எம் மோட், புரோ மோட், ஏஐ ஸ்கேன் மற்றும் சூப்பர் மேக்ரோ போன்ற அம்சங்களும் உள்ளன.

இந்த ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி 18 வாட் குயிக் சார்ஜ் வசதியுடன் பொருத்தப்பட்டுள்ளது.

Spread the love