August 14, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

பட்டுக்கோட்டை வட்டாரத்தில் குறுவை தொகுப்புத் திட்ட பணிகள்

வேளாண்மை இயக்குநர் ஆய்வு

தஞ்சாவூர், ஜூலை 4

பட்டுக்கோட்டை வட்டாரத்தில் 3.7.22 அன்று குறுவை தொகுப்புத் திட்ட பணிகள் குறித்து வேளாண்மை இயக்குநர் அண்ணாத்துரை ஆய்வு மேற்கொண்டார். பட்டுக்கோட்டை மாநில தென்னை நாற்றங்கால் ஆய்வு மேற்கொண்டபோது கீழ்கண்ட அறிவுரைகள் வழங்கினார்.

  1. இதர மாவட்டங்களுக்கான இலக்கீட்டின்படி நெட்டை ரக தென்னங்கன்றுகள் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட விநியோகத்திற்கு உடனடியாக மாற்றம் செய்ய அறிவுறுத்தினார்.
  2. தென்னையைத் தாக்கும் சுருள் வெள்ளை ஈயை கட்டுப்படுத்த மாநில தென்னை நாற்றங்கால் தொடர் செயல்விளக்கம் செய்ய அறிவுறுத்தினார்.
  3. நடவு செய்யப்பபட்ட தென்னங்கன்று பாத்திகளில் களை நிர்வாகத்தினை முறையாக செய்ய அறிவுறுத்தினார்.
  4. ஏற்கனவே உள்ள எண்ணெய் பனை மரங்களில் உள்ள தேவையற்ற மட்டைகளை அகற்றி மகசூல் அதிகரிக்க செலவினத்துக்கான கருத்துரு வழங்க அறிவுறுத்தினார்.

மேலும், பட்டுக்கோட்டை வேளாண்மை விரிவாக்க மையத்தில் ஆய்வு மேற்கொண்ட போது கூறியதாவது,

  1. விதைகளை முளைப்புத் திறன் பாதிக்காதவாறு உரிய முறையில் பராமரிக்க அறிவுறுத்தினார்.
  2. சேமித்து வைக்கப்பட்ட விதைகளை பூச்சிகள் தாக்கா வண்ணம் மேலாண்மை முறைகளை கையாள அறிவுறுத்தினார்.
  3. நசுவினி ஆற்று நீர் பாசன சங்கத்தலைவர் வீரசேனன் மற்றும் முன்னோடி விவசாயிகளிடம் கலந்துரையாடினார்

.
குறுவைத் தொகுப்பு திட்ட இடுபொருட்கள் வழங்கல் :

  1. பட்டுக்கோட்டை வட்டாரத்தில் குறுவை தொகுப்புத் திட்ட இலக்கு 890 ஏக்கர் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இலவச உரம் பெற உழவன் செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்ட துவரங்குறிச்சியை சேர்ந்த முருகேசன் என்ற விவசாயிக்கு தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்தில் உரம் வாங்குவதற்கான உத்தரவு நகல் வழங்கப்பட்டுள்ளது.
  2. மாற்றுப் பயிர் சாகுபடியினை ஊக்குவிக்கும் பொருட்டு கேழ்வரகு விதை, உயிர் உரங்கள், சூடோமோனாஸ் போன்ற இடுபொருட்களை மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கினார்.

கள செயல்விளக்கம் :

  1. மாற்றுப் பயிர் சாகுபடி செய்ய ஆர்வமுள்ள சூரப்பள்ளம் விவசாயி ரவி என்பவரின் வயலில் கேழ்வரகு பயிர் செய்வதற்கான நாற்றங்காலில் விதைப்பு செய்யும் பணியிணை துவக்கி வைத்து விவசாயிகளிடையே கலந்துரையாடினார்.
  2. அதே கிராமத்தில் உளுந்து மாற்றுப் பயிர் சாகுபடி செய்யும் விவசாயி கோவிந்தராசு என்பவரின் வயலில் விதைப்பு இயந்திரத்தின் மூலம் உளுந்து வரிசை விதைப்பு செய்யும் முறையின் செயல் விளக்கத்தை பார்வையிட்டார்.
  3. சூரப்பள்ளம் கிராமத்தில் காண்டாமிருக வண்டு பாதிக்கப்பட்ட தென்னந்தோப்பினை ஆய்வு செய்து அதை முறையாக கட்டுப்படுத்த அதிகாரிகளை அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின் போது தஞ்சாவூர் வேளாண்மை இணை இயக்குநர் ஜஸ்டின், வேளாண்மை துணை இயக்குநர், ஈஸ்வர், வேளாண்மை உதவி இயக்குநர், மாலதி, விதை ஆய்வாளர், நவீன், விதைச் சான்று அலுவலர், சங்கீதா, வேளாண்மை அலுவலர்கள், உதவி வேளாண்மை அலுவலர்கள், உதவி விதை அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

Spread the love