January 23, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

பண்ணைகளில் ஈ கட்டுப்பாட்டு முறைகளைக் கையாள வேண்டுகோள்

நாமக்கல், மே 19

கோழிப் பண்ணைகளில் ஈ கட்டுப்பாட்டு முறைகளைக் கையாள வேண்டும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

இது குறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : கடந்த சில நாள்களாக பகல், இரவு நேர வெப்ப அளவுகள் முறையே 98.6, 75.2 டிகிரியாக உள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் பல இடங்களில் பரவலாக மழை பதிவாகியுள்ளது, இனி வரும் மூன்று நாள்களில் வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். காற்று மணிக்கு 6 கிலோ மீட்டர் வேகத்தில் தெற்கு திசையில் இருந்து வீசும். மாவட்டத்தின் ஒரு சில இடங்களில் லேசான மழை எதிர்பார்க்கப்படுகிறது.

நாமக்கல் மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் ஆங்காங்கே மிதமான மழை பெய்து வருகிறது. இருப்பினும் பகல் நேரங்களில் வெப்ப சலனம் அதிகமாகியுள்ளதால் பூச்சி வகைகளின் இனப்பெருக்கத்துக்கு உகந்ததாக இருக்கும். அதனால் கோழிப் பண்ணைகளில் ஈ கட்டுப்பாடு முறைகளைக் கையாள வேண்டும். இறந்த கோழிகள், உடைந்த முட்டைகளை உடனே அப்புறப்படுத்த வேண்டும். மேலும் தீவன சிதறல்களைத் தவிர்க்க வேண்டும். ஈக்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தால் கோழிகளுக்கு மருந்து கலந்த தீவனம் கொடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love