June 25, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

பண்ணைக்குடியில் பாசன வேளாண்மை நவீனப்படுத்தும் திட்ட கூட்டம்

மதுரை, மார்ச் 29

மதுரை வேளாண் கல்லூரியில் இளங்கலை நான்காம் ஆண்டு பயிலும்

மாணவிகள் அஸ்வினி பிரியதர்ஷனி, ஆவணி, பவதாரணி, பூமிகா, பிளஸிஸ் கிஃப்டா, சின்றல்லா ஆகியோர் ஊரக வேளாண் பணி அனுபவ திட்டத்தின் ஒரு பகுதியாக பண்ணைக்குடி ஊராட்சியில் தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீனப்படுத்தும் திட்டம் குறித்து நடத்தப்பட்ட பொது கூட்டத்தில் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் நீர் தட்டுப்பாடு குறித்தும், மேலாண்மை முறைகள் குறித்தும் துறை சார்ந்த அதிகாரிகள் உரையாற்றினர். மேலும், இக்கூட்டத்தில் நீர் சேமிப்பு மற்றும் மேலாண்மை குறித்த மாதிரிகளை வேளாண் மாணவிகள் காட்சிப்படுத்தினர்.

Spread the love