January 24, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

பண்ணையில் இளநீர் விலை குறைப்பு

கோவை, மே 10

வரத்து குறைந்த நிலையில் இளநீருக்கு விலையும் குறைந்துள்ளது.

கோவை மாவட்டம், பொள்ளாச்சி, ஆனைமலை ஒன்றிய பகுதிகளில், இளநீர் வரத்து குறைந்துள்ளது. இந்நிலையில், முழு ஊரடங்கு திங்கள்கிழமை முதல் அறிவிக்கப்பட்டுள்ளதால், இந்த வாரம் இளநீர் விலை குறைக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம், ரூ.33 விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த வாரம், இளநீரின் தரத்தை பொறுத்து விவசாயிகள், ரூ.29 முதல் ரூ.31க்கு விற்பனை செய்யலாம். பல வியாபாரிகள் முழு ஊரடங்கை காரணமாகக்கூறி திட்டமிட்டு, இளநீர் பண்ணை விற்பனை விலையை குறைக்க முயற்ச்சிக்கின்றனர். விவசாயிகள் ஒற்றுமையாக இருந்து, நிர்ணயித்த விலையில் இளநீர் விற்பனை செய்ய வேண்டும். இத்தகவலை, ஆனைமலை இளநீர் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் தெரிவித்தார்.

Spread the love