June 25, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

பண்ணை இயந்திரமாக்கல் குறித்த மாவட்ட அளவிலான விவசாயிகள் பயிற்சி

மதுரை, ஜூன் 8

மதுரை மாவட்டம், மதுரை கிழக்கு வட்டார வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் வலச்சிகுளம் கிராமத்தில் வேளாண்மை பொறியியல் துறை மூலமாக 7.6.22 அன்று பண்ணை இயந்திரமாக்கல் குறித்த மாவட்ட அளவிலான விவசாயிகள் பயிற்சி நடைபெற்றது. இந்த பயிற்சியில் வலச்சிகுளம் ஊராட்சிமன்ற தலைவர் சண்முகம் முன்னிலை வகித்தார். இரா.வளர்மதி, வேளாண்மை உதவி இயக்குநர், மதுரை மேற்கு பயிற்சிக்கு தலைமையேற்று விவசாயிகளிடம் பண்ணை இயந்திரங்கள் செயல்பாடுகள் குறித்து விளக்கமளித்தார். வேளாண்மை பொறியில்துறை உதவி பொறியாளர் உமாதேவி, கலந்து கொண்டு வேளாண் பொறியியல் துறையின் மூலமாக வழங்கப்படும் பண்ணை இயந்திரங்கள் குறித்த மானியங்களின் விபரங்களும் அதனை பெறுவதற்கான வழிமுறைகளையும் விவசாயிகளிடம் எடுத்துரைத்தார். மதுரை வசந்தம் டிரேடர்ஸ் நிறுவன உரிமையாளர் சுரேஷ், பயிற்சியில் கலந்து கொண்டு பண்ணை இயந்திரங்களின் பயன்பாடுகள் பற்றியும் அதன் உபயோகம் குறித்தும், நெல் அறுவடை இயந்திரம், வரப்பு வெட்டும் கருவிகள், களை வெட்டும் கருவிகள், நெல் நடவு இயந்திரம், ரோட்டவேட்;டார் ஆகிய கருவிகளின் செயல்பாடுகளின் முக்கியத்துவத்தினையும் விவசாயிகளிடம் தெளிவாக விளக்கினார். இப்பயிற்சியில் 40 விவசாயிகள் கலந்து கொண்டனர். இப்பயிற்சிக்கான ஏற்பாடுகளை அட்மா திட்ட பணியாளர்களான மூவேந்திரன் மற்றும் யுவராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.

Spread the love