கோவை, ஏப்.2
இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம், புது தில்லி 28.03.2022 முதல் 4.4.2022 வரை தேசிய அளவிளான பண்ணை இயந்திரமாக்கல் விழிப்புணர்வு முகாமை நடத்தி வருகிறது. இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் – மத்திய வேளாண் பொறியியல் நிறுவனம் – மண்டல மையம், கோயமுத்தூர், விவசாயிகளுக்கு பண்ணை இயந்திரமாக்குதல் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சியை பன்னிமடை கிராமம், கோயம்புத்தூர் மாவட்டத்தில் 01.04.2022 அன்று நடத்தியது. இந்நிகழ்ச்சியின் முக்கியதுவம் விவசாயத்தில் இயந்திரமாக்கல் முறை மூலம் இரட்டிப்பு விளைச்சல் மற்றும் மும்மடங்கு வருமானம் ஈட்ட முடியும் என்பதை விளக்குவதாகும்.
இந்நிகழ்ச்சியில் மத்திய வேளாண் பொறியியல் நிறுவனம் – மண்டல மையத்தின் முதன்மை விஞ்ஞானி முனைவர் த.செந்தில்குமார் வரவேற்புரை வழங்கி விவசாயத்தில் இயந்திரமாக்கல் முறை மூலம் ஏற்படும் நன்மைகளை எடுத்துரைத்தார். இந்நிகழ்ச்சியில் மத்திய வேளாண் பொறியியல் நிறுவனம் – மண்டல மையத்தின் தலைவர் மற்றும் முதன்மை விஞ்ஞானி முனைவர் சி.பாலசுப்பரமணியன் விவசாயத்தில் இயந்திரமாக்கல் மற்றும் தானியங்கி இயந்திரமாக்கல் முக்கியதுவத்தை பற்றி பேசினார். இந்நிகழ்ச்சியில் மத்திய வேளாண் பொறியியல் நிறுவனம் – மண்டல மையத்தினரால் வடிவமைத்து, மேம்படுத்தப்பட்ட கரும்பு, வாழை, கேரட் மற்றும் மரவள்ளி போன்ற பயிர்களுக்கான பண்ணை கருவிகளை பற்றி விவசாயிகளுடன் விவாதிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியை மத்திய வேளாண் பொறியியல் நிறுவனம் – மண்டல மையத்தின் விஞ்ஞானி முனைவர் எஸ்.சையத் இம்ரான் ஒருங்கிணைந்து நடத்தினார். இந்நிகழ்ச்சியில் 25 மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர். இந்த வாரத்தில் பல்வேறு பண்ணை இயந்திரமாக்கல் பற்றிய நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது.
Spread the love