August 8, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

பண்னை இயந்திரமாக்குதல் உள் மாவட்ட விவசாயிகள் பயிற்சி

கடலூர், ஜூலை 8

கடலூர் மாவட்டம், கம்மாபுரம் வட்டாரம் வேளாண்மை உழவர் நலத்துறை அட்மா திட்டத்தில் மூலமாக விவசாயிகளுக்கு கோ.ஆதனூர் கிராமத்தில் பண்னை இயந்திரமாக்குதல் உள் மாவட்ட விவசாயிகள் பயிற்சி, வேளாண்மை உதவி இயக்குநர் சுதமதி தலைமையில் நடைபெற்றது. வட்டார தொழில்நுட்ப மேலாளர் தங்கதுரை வரவேற்புரை ஆற்றினார். வேளாண்மை துனை இயக்குநர், கடலூர் (மத்திய திட்டம்) கென்னடி செபக்குமார், விவசாயிகளுக்கு கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கினைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தினை விவசாயிகளுக்கு சிறப்புரை ஆற்றினார். கால்நடை மருத்துவர் தமிழரசி கால்நடை திட்ட பயிற்சி அளித்தார். வேளாண் வணிகம் விற்பனை துறை கெஜிகுமார், தோட்டக்கலைத்துறை அருள், வேளாண் பொறியியல் துறை வீரசுப்பரமணியன் பயிற்சி அளித்தனர். உதவி தொழில்நுட்ப மேலாளர் ரமேஷ் செல்லமுத்து திரளான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Spread the love