கடலூர், ஜூன் 22
கடலூர் மாவட்டம், கம்மாபுரம் வட்டாரம் அட்மா திட்டத்தின் சார்பாக கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் ஊ.அகரம் கிராமத்தில் பண்னை இயந்திரம் ஆக்குதல் பயிற்சி, வேளாண்மை உதவி இயக்குநர் சுதமதி தலைமையில் நடைபெற்றது. உதவி பொறியாளர் வீரசுப்பரமணியன் பயிற்சி அளித்தார். பயிற்சியில் களை எடுக்கும் கருவி, ரொட்டவேட்டர், ஸ்பிரேயர், நெல் அறுவடை இயந்திரம் ஆகியவை பயன்களை கூறினார். ஊராட்சிமன்ற தலைவர் சாவித்திரி, வேளாண்மை அலுவலர் ரத்னா, வட்டார தொழில் நுட்ப மேலாளர் தங்கதுரை, உதவி தொழில் நுட்ப மேலாளர் ரமேஷ் செல்லமுத்து கலந்து கொண்டனர்.
Spread the love