கடலூர், மே 18
பண்ருட்டி என்றாலே நினைவுக்கு வருவது பலா பழம்தான். எனவே, தான் பண்ருட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் பலாப்பழம் சாகுபடி உள்ளது.
ஆண்டு தோறும் பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே ஆகிய மாதங்கள் பலாப்பழ சீசன் ஆகும்.
இந்த ஆண்டுக்கான பலாப்பழம் விற்பனை கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கியது. இந்நிலையில் கரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவத்தொடங்கியது. வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பலாப்பழம் விற்பனை முற்றிலுமாக பாதிக்கப்பட்டது. இதனால் சுமார் ரூ.500 கோடி அளவிற்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
கடந்த ஓராண்டாக அமலில் இருக்கும் ஊரடங்கால் பெரும் நஷ்டத்தை சந்தித்து வரும் பலா வியாபாரிகள் இதிலிருந்து மீண்டு வர முடியாமல் தவித்து வருகின்றனர். சென்னை, ஆந்திரா, மும்பை, கொல்கத்தா, குஜராத் ஆகிய மாநிலங்களுக்கு அனுப்பப்பட்ட பலா பழங்கள் விற்பனையாகமல் மண்டியிலே அழுகும் நிலை உள்ளது. இதனால் மரத்திலேயே பழுத்து தொங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த பலா விற்பனை நம்பி உள்ள பலா விவசாயிகள், பலா வியாபாரிகள் நிலை கேள்வி குறியாகி உள்ளது.